இந்தியத் தர நிர்ணய அமைவனம்

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards) நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆளுமைக்குட்பட்ட ஓர் இந்தியத் தர நிர்ணய அமைப்பாகும். இந்திய நுகர்வுப் பொருட்களின் தர நிர்ணயம், தரச்சான்றிதழ் மற்றும் தரமதிப்பையும் ஒழுங்குபடுத்துவது இதன் வேலையாகும். அமைச்சகத்தின் அமைச்சரே இந்த அமைவனத்தின் அதிகாரத்தைக் கொண்டிருப்பார்.

இலச்சினை
ISI-Mark-Logo
Compulsory Registratio Logo

வரலாறு

தொகு

இந்தியா, சுதந்திரம் அடைந்தப்பின் 1947ல் தொழிற்துறையில் முன்னேற்றமடைய தர நிர்ணய முறையை இந்திய தர நிர்ணய அமைப்பின்(Indian Standards Institution) மூலம் இந்திய அரசு அமல்படுத்தியது. பிறகு பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இந்த அமைப்பிற்கு கூடுதல் வலிமை வழங்க 1986 இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம் இயற்றி இந்திய தர நிர்ணய அமைவனமாக 1987 ஏப்ரல் 1ல் மாற்றப்பட்டது.[1]

குறிக்கோள்கள்

தொகு
  • தரத்தை நிர்ணயம் செய்வதிலும், மதிப்பிடலிலும், தரச்சான்று வழங்குவதிலும் இணக்கமான முன்னேற்றம் பெறுதல்
  • தர நிர்ணயத்திற்கும், தரக் கட்டுபாட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்தல்
  • தரமதிப்பிற்கேற்ப தேசிய வியூகத்தை உருவாக்கி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னேற்றம் பெறுதல்

அமைப்பு

தொகு

மத்திய அல்லது மாநில அரசு, தொழிற்துறை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்த 25 உறுப்பினர்களைக் கொண்டது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு 20 கிளைகளைக் கொண்டுள்ளது.[2] தரச் சான்றிதழ் வழங்கும் விதமாக 8 ஆய்வுக்கூடங்களையும் கொண்டுள்ளது.

ஹால்மார்க் நிர்ணயம்

தொகு

தங்க நகைகளின் தரத்தை மதிப்பிட இவ்வமைவனத்தின் மூலம் 2000 முதல் 'பிஐஎஸ் ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் பிஐஎஸ் விலைமதிப்புள்ள உலோகப் பிரிவுக் குழுவின் படி தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் தர நிர்ணயங்கள்:

  • IS 1417 - ஆபரணத் தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் தகுதி நிலை
  • IS 1418 - சொக்கத் தங்கம், ஆபரணத் தங்கம் மற்றும் தஙகக் கலப்புலோகங்களின் மதிப்பீடு
  • IS 2790 - 23,22,21,18,14 மற்றும் 9 காரட் தஙகக் கலப்புலோகங்களின் வழிநெறி
  • IS 3095 - ஆபரணத் தங்க உற்பத்தியில் பயன்படும் தஙகப்பற்றுகள்
  • 2005 முதல் வெள்ளிக்கும் ஹால் மார்க் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • IS 2112 - ஆபரண வெள்ளி மற்றும் வெள்ளிக் கலப்புலோகங்களின் தகுதி நிலை

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.bis.org.in/org/obj.htm
  2. BIS Annual Report 2006-07