இந்தியத் தேனீ

இந்தியத் தேனீ
இந்தியத் தேனீ, ஏபிசு செரானா இண்டிகா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைமனோப்டெரா
குடும்பம்:
ஏபிடே
பேரினம்:
இனம்:
ஏ. செரானா 
துணையினம்:
இண்டிகா
இருசொற் பெயரீடு
ஏபிசு செரானா இண்டிகா
பேப்ரிசியசு, 1798

ஏபிசு செரானா இண்டிகா (Apis cerana indica) அல்லது இந்தியத் தேனீ என்பது ஆசியத் தேனீயின் ஒரு துணையினம் ஆகும். இவ்வகை தேனீக்கள் இந்தியா, பாக்கித்தான், நேபாளம், மியான்மர், வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. இது சாதுவான தேனீயாக உள்ளதாலும் கொட்டும் தன்மையைக் குறைவாக உள்ளதாலும் கூட்டினை விட்டு அரிதாகப் பிரிந்து செல்வதாலும் தேனீ வளர்ப்புக்கு அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இது ஐரோப்பியத் தேனீ (ஏபிசு மெலிபெரா) போன்றது. ஐரோப்பியன் தேனீயினை விடச் சற்று பெரியதாக இருப்பதால் இதனை எளிதில் வேறுபடுத்தி அறியலாம். இவ்வகை தேனீக்கள் மரத்தின் கிளைகள், பொந்துகள், மனிதனால் கட்டப்பட்ட கட்டிடங்கள், குகைகள் ஆகியவற்றில் தேன் கூட்டைக் கட்டி அதில் தேனைச் சேமிக்கின்றன. மேலும் இவை தென்னை மரங்களின் முக்கியமான மகரந்தக்காவிகளாக உள்ளன.[1] இவற்றின் கூடு கட்டும் பழக்கம் என்பது, நீடித்த குளிர்காலம் அல்லது குளிர்ந்த வெப்பநிலையுடன் கூடிய மிதமான அல்லது மலைப் பகுதிகளில் உள்ளன. ஐரோப்பியத் தேனீக்களின் வழக்கமான கூட்டமைப்பினை ஒப்பிடும் போது வேலைக்கார தேனீக்கள் இவற்றில் சில ஆயிரம் மட்டுமே காணப்படும். ஏபிசு கரிஞ்சோடியன் கண்டுபிடிக்கப்பட்டதை விவரிக்கும் சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குழியில் கூடு கட்டும் தேனீ இனமானது, ஏ. இண்டிகா என்பது ஏ. செரானாவிலிருது ஒரு தனித்துவமான இனமாக விவரிக்கப்பட்டது. மேலும் இதன் தாயகம் தென்னிந்தியாவாகவும் இருக்கலாம் என்றும் முன்மொழியப்பட்டது. ஐரோப்பிய தேனீயான ஏபிசு மெல்லிபெராவின் தோற்றத்தின் மையமாக இருக்கலாம்.[2][3]

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  • Benjamin P. Oldroyd and Siriwat Wongsiri. Asian Honey Bees (Biology, Conservation, and Human Interactions). 2006: Harvard University Press, Cambridge, Massachusetts and London, England.
  • Tautz, J and M. Lindauer. 1997. "Honeybees establish specific nest sites on the comb for their waggle dances". Journal of Comparative Physiology 180:537-539.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தேனீ&oldid=3723990" இலிருந்து மீள்விக்கப்பட்டது