இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948

இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 என்பது இந்தியத் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை முறைப்படுத்தவும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்தவும், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதி செய்வதற்காகவும் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டமாகும்.

வரலாறு

தொகு

தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை முறைப்படுத்தவும், தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்தவும் 1872 ஆம் ஆண்டு மேஜர் மூர் என்பவர் அளித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 1881 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அரசு ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி தொழிற்சாலைகள் சட்டம் 1934 கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்பு, இதிலுள்ள குறைபாடுகளைக் களையும் நோக்கத்துடன் “இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948” கொண்டு வரப்பட்டது.