இந்தியாவில் தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள்

தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் (Learning Outcomes in Elementary Education) என்பது தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இந்தியா முழுமைக்குமாக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் கற்றல் விளைவுகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது விரிவான முறையில் விளக்கப்படவில்லை. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் முயற்சியினால் நாடு முழுவதிலும் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிலை வரை உள்ள கல்விசார் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு கற்றல் விளைவுகளுக்கான இந்த ஆவணத்தை தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏப்ரல் 2017 இல் வெளியிட்டது.[1] [2][3]

கற்றல் விளைவுகள் வரையறுக்கப்பட வேண்டியதன் அவசியம்

தொகு

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுதாய உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறை நிருவாகிகள் போன்றோர் மாணவர்களின் கற்றலை அறிந்து கொள்ளவும், கற்றல் மேம்பாட்டினைக் கண்காணிக்கவும் ஆர்வமாக இருந்தனர். இதற்கு சில வரன்முறைகள் தேவையாக இருந்தன. கற்றல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குழந்தைகள் எவ்வாறு உள்ளனர் என்பதைக் கல்வித்துறை அமைப்பிற்கு தெரிவிப்பது ஒரு சவாலாகவே இருந்து வந்தது. எனவே, கலைத்திட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் (தொடக்கக்கல்வியிலுள்ள அனைத்துப் பாடங்களுக்கான) கற்பித்தல் செயல்பாடுகளைக் கற்றல் விளைவுகளோடு இணைத்து ஒரு ஆவணத்தை தேசியக் கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்தது.

தொடக்கக்கல்வியில் கற்றல் விளைவுகள் ஆவணம்

தொகு

இந்த ஆவணம் தொடக்க நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் மொழிகள், கணக்கு, சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கற்றல் விளைவுகளைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு

http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Learning_outcomes.pdf

மேற்கோள்கள்

தொகு
  1. http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Learning_outcomes.pdf
  2. http://mhrd.gov.in/draft-learning-outcomes
  3. https://indianexpress.com/article/india/centre-amends-rte-rules-states-must-now-map-learning-outcomes-4554950/