இந்தியாவில் பாலின ஊதிய இடைவெளி
இந்தியாவில் பாலின ஊதிய இடைவெளி (Gender pay gap in India) என்பது வருமானம் ஈட்டும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையேயான வருமானத்தில் உள்ள வேறுபாட்டைக் குறிக்கிறது. [1] 2013 ஆம் ஆண்டில், இந்தியாவில் பாலின ஊதிய இடைவெளி வீதம் 24.81% என மதிப்பிடப்பட்டுள்ளது. [2] மேலும், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பின் அளவை பகுப்பாய்வு செய்யும் போது, இந்த அறிக்கையில் இந்தியா அதன் பட்டியலில் கீழ் உள்ள 10 நாடுகளில் உள்ளது. இதில், சமமற்ற ஊதியத்துடன், சமமற்ற பிரதிநிதித்துவமும் உள்ளது, ஏனென்றால் பெண்கள் இந்திய மக்கட் தொகையில் கிட்டத்தட்ட பகுதி அளவு உள்ளனர். மக்கட் தொகையின் மொத்தத்தில் சுமார் 48% என்றாலும், தொழிலாளர் குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவம் மொத்தத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. [3]
வரலாறு மற்றும் பங்களிப்பு காரணிகள்
தொகு1901 முதல் 1951 வரை இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 28 முதல் 34 சதவிகிதம் வரை இருந்தது, இது 1990 இல் காணப்பட்ட பங்கேற்பை விட அதிகமாகும். [4] இந்த விகிதம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களை விட வட இந்தியாவில் உள்ள பிராந்தியங்களில் (அதிக ஆணாதிக்க ரீதியாகக் காணப்படுகின்றன) பெண்களின் பங்கேற்பு விகிதங்கள் குறைவாக உள்ளன, அங்கு பெண்களுக்கு முறையான பொருளாதாரத்தில் பங்கேற்க அதிக சுதந்திரம் உள்ளது. [4] சுயதொழில் மகளிர் சங்கம் சமீபத்தில் பெண் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 1815 ஆண்களின் சராசரி ஊதியம் ரூ. 3842 என்று கண்டறிந்தது.
இந்தியாவில் இருக்கும் பாலின ஊதிய இடைவெளியில் பங்களிக்கும் சில முக்கிய காரணிகள் பின்வருமாறு:
தொழில் விருப்பத்தேர்வுகள்
தொகுஊதிய தொழிலாளர் சந்தையில் பெண் பங்கேற்பு விகிதம் பொதுவாகவே குறைவாக உள்ளது. மேலும் பெண்களின் பங்களிப்பானது, குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயத் துறையில் அதிகமாக உள்ளது. [5] வட இந்தியாவின் கிராமப்புறங்களில், பாலின அடிப்படையில் தொழிலாளர் பணிகள் பிரிக்கப்படுகிறது. உழவு மற்றும் அறுவடை போன்ற பிற பணிகள் ஆண்களால் மட்டுமே செய்யப்படும்போது, தானியங்களை உலர்த்துவது மற்றும் சேமிப்பது போன்ற விவசாயத்தில் சில நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. [6] [7] இது விருப்பம் சார்பான நடவடிக்கைகள் மட்டுமே, இதில் ஆண் ஆதிக்கம் இருப்பது இல்லை. இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு தனிப்பட்ட சேவைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் சம்பந்தப்பட்ட துறைகளில் அதிகமாக இருப்பதைக் காணலாம், மேலும் முறைசாரா துறைகளில், குறிப்பாக விவசாயத்தில் அதிகமாக உள்ளது. [8]
பண்பாட்டு தடைகள்
தொகுஇந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் சமூக மற்றும் பண்பாட்டு விதிமுறைகள் மாறுபடும் அதே வேளையில், ஊதியம் பெறும் தொழிலாளர் சந்தையில் இருந்து பெண்களை விலக்குவது மற்றும் பொருளாதார அடிப்படையில் தொழிலாளர்களை பிரிப்பது ஆகியவை பொதுவாகாவே நடைபெறும் செயல்களாகும். [6] உயர் சாதியாகக் கருதப்படும் பெண்கள், அவர்கள் பிழைப்பு சார்ந்து இருந்தாலும், கூலி வேலை பெற முயன்றபோது அதிக சிரமத்தை எதிர்கொண்டனர். [6] பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு பணிக்குத் திரும்பும்போது அவர்களுடைய சக ஆண் ஊழியர்களைக் காட்டிலும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. முழுநேர வேலை செய்யும் பெண்கள் பொதுவாக ஆண்களை விட 34% குறைவாக சம்பாதிக்கிறார்கள், ஆனால் பகுதி நேர வேலை செய்யும் பெண்களுடன் ஒப்பிடும்போது, ஆண்களை விட சுமார் 42% குறைவாக சம்பாதித்ததால் ஊதிய இடைவெளி மேலும் அதிகரித்தது. [9]
சான்றுகள்
தொகு- ↑ Dutta, Puja (2005). "Accounting for Wage Inequality in India". The Indian Journal of Labour Economics. http://www.isleijle.org/ijle/IssuePdf/d7ce3acf-12eb-4ead-932a-f8de5bf31ead.pdf. பார்த்த நாள்: 2021-09-06.
- ↑ "Gender Pay Gap in the Formal Sector: 2006 - 2013(September, 2013)". Wage Indicator Data Report.
- ↑ "Eleventh Five Year Plan (2007-2012) Planning Commission, Government of India". Archived from the original on 2018-06-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
- ↑ 4.0 4.1 Esteve-Volart, Berta (2004). "Gender Discrimination and Growth: Theory and Evidence from India (January, 2004)" (PDF). London School of Economics.
- ↑ Staff Discussion Note, IMF (September 2013). "Women, Work, and the Economy: Macroeconomic Gains from Gender Equity" (PDF). International Monetary Fund.
- ↑ 6.0 6.1 6.2 Martha C. Nussbaum, Jonathan Glover, Martha Chen (1995). Women, Culture, and Development: A Study of Human Capabilities. Clarendon Press.
- ↑ Dewan, Sabina (2014). "Closing the Gender wage gap in Indian Agriculture" (PDF). JustJobs Network.
- ↑ Anil Kumar Mishra, Tauffiqu Ahamad, Jitendra Kumar Pandey (December 2014). "The Status of Women Workers in the Unorganized Sector" (PDF). Newman International Journal of Multidisciplinary Studies, Volume 1, Issue 12. pp. 72–79. Archived from the original (PDF) on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Leeja Anand, Biju Varkkey, Rupa Korde (September 2012). "Gender Pay Gap in the Formal Sector: Preliminary Evidence from Paycheck India Data". WageIndicator Data Report.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)