இந்தியாவில் பெண்களுக்கான நலத்திட்டங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15 (3)  - ஆனது பெண்களுக்கு சாதகமான பாகுபாடு காட்டுவதை அனுமதிக்கிறது. சம உரிமை அளிக்கும் சட்டத்தின் கீழ் வரும் இந்தப் பிரிவானது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் எந்தவொரு சிறப்புச் சலுகைகளையும் தடை செய்யாது என தெளிவுபடுத்தியுள்ளது.[1]

மேலும், "குறிப்பாக, குடிமக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக, போதுமான வாழ்வாதாரத்திற்கான உரிமையைப் பெறுவதை நோக்கி அரசு தனது கொள்கையை வழிநடத்தும்." என்று மாநிலக் கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகள் 39 (ஏ)கூறுகிறது.

இந்தியாவில் குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு கடன் கிடைக்க 1993 ஆம் ஆண்டில் ராஷ்டிரிய மகிலா கோஷ் (RMK) (பெண்களுக்கான தேசிய கடன் நிதி) அமைக்கப்பட்டது.[2]'தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு  (MCTS), இந்திரா காந்தி மத்ரித்வா சஹ்யோக் யோஜனா (IGMSY)(இந்திரா காந்தி மகப்பேறு உதவித் திட்டம்), நிபந்தனையோடு கூடிய மகப்பேறு நன்மை திட்டம் (CMP), அத்துடன் இளம்பருவ சிறுமிகளை மேம்படுத்துவதற்கான ராஜீவ் காந்தி திட்டம் (RGSEAG) ஆகியவை இந்திய அரசால் தொடங்கப்பட்ட சமீபத்திய திட்டங்களில் அடங்கும்.

தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு (MCTS)தொகு

தாய் மற்றும் குழந்தை கண்காணிப்பு அமைப்பு 2009 இல் தொடங்கப்பட்டது. இது சுகாதார அமைப்பை கண்காணிக்க உதவுகிறது. எல்லா தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பல விதமான சேவைகளை பெறுவது குறித்து உறுதி செய்கிறது. குறிப்பாக, கர்ப்பகால பராமரிப்பு, பிரசவத்தின் போது மருத்துவப் பராமரிப்பு, நோய் தடுப்பு மருந்துங்கள் பெற வழியுறுத்துவது போன்றவைகள் அடங்கும்.

இந்த அமைப்பு 1 டிசம்பர் 2009 முதல், கர்ப்பகாலம் முதல் குழந்தை பிறப்பு வரை எல்லா நடவடிக்கைகளும் உடல் நலம் மையங்களில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கிறது.


பிரதான் மந்திரி மத்ரித்வ வந்தனா யோஜனா (பிரதம மந்திரி பெண்கள் மகப்பேறுத் திட்டம்) (PMMVY)தொகு

இந்திரா காந்தி தாய்மை நலத்திட்டம் (IGMSY), நிபந்தனையோடுகூடிய மகப்பேறு உதவி (CMB) என்பது தேசிய அரசாங்க நிதியுதவி திட்டமாகும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு முதல் இரண்டு பிரசவத்திற்கான நிதியுதவி செய்யும் திட்டமாகும். அக்டோபர் 2010 இல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் பயனாளர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்த உதவுவதற்காக பணத்தை வழங்குகிறது. மார்ச் 2013 நிலவரப்படி, நாடு முழுவதும் 53 மாவட்டங்களில் இந்த திட்டம் வழங்கப்படுகிறது.[3]

இளம்பெண்ணுரிமைக்கான ராஜீவ் காந்தி திட்டம் - சப்லாதொகு

இளம்பெண்ணுரிமைக்கான ராஜீவ் காந்தி திட்டம் - சப்லா (Sabla) என்பது 2012 இல் தொடங்கப்பட்ட திட்டமாகும்.. இது இளம் பெண்களுக்கான திட்டமாகும்.

இந்த திட்டம் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தொகுப்பான பல நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டம் ஆரம்பத்தில் 200 மாவட்டங்களில் சோதனைகாக செயல்படுத்தப்பட்டது.

இதன் நோக்கம் இளம் பெண்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்த உதவவுதற்காகவும், கூடுதல் ஊட்டச்சத்து வழங்கவும், கல்வி, சுகாதாரக் கல்வி, வாழ்க்கைத் திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி என பல்வேறு சேவைகளை வழங்குகிறது.[4]

ராஷ்டிரிய மகிலா கோஷ்தொகு

ராஷ்டிரிய மகில கோஷ் திட்டம் (பெண்களுக்கான தேசிய கடனுதவி திட்டம்) 1993 ல் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. குறைந்த வருமானம் உள்ள பெண்களுக்கு சிறு தொழில் செய்வதற்கான கடனுதவி செய்வது இதன் நோக்கம் ஆகும்.[5]

பிரியதர்ஷினிதொகு

ஏப்ரல் 2011 இல் தொடங்கப்பட்ட பிரியதர்ஷினி, ஏழு மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை அணுகுவதற்கான ஒரு திட்டமாகும்.

குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம்தொகு

குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம் 2017 இல் தொடங்கப்பட்டது, இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

டிஜிட்டல் லாடோ (DigitalLaado)தொகு

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce & Industry) (FICCI) [6]மற்றும் கூகுள் டிஜிட்டல் அன்லாக்டு (Google Digital Unlocked)[7] இரண்டும் இணைந்து கணினி எண்மத் தளங்களில் பெண் குழந்தைகள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வலுபெறவும் அதிகாரமளிப்பதற்கான முன்னெடுப்பை தொடங்கியது.

இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, வீட்டு வேலைகளின் காரணமாக 65% பெண் குழந்தைகள் உயர்கல்வியை கைவிடுகிறார்கள்.

இந்த திட்டம் ஒரு நாடு தழுவிய முயற்சியாகும், இதில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கும் உலகளாவிய தளத்துடன் இணைவதற்கும் அவர்களின் திறமை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் கற்பிக்கப்படுகிறது.

கணினி வலையத்தோடு இணைந்த நிலையிலும் இணைப்பற்ற நிலையிலும் உலகில் எங்கிருந்தும் இந்த நன்மைகளைப் பெற பெண் குழந்தைகள் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

குறிப்புகள்தொகு

  1. "Constitution of India" (PDF) (December 2007). பார்த்த நாள் 21 June 2014.
  2. https://pib.gov.in/newsite/erelease.aspx?relid=93123
  3. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=92842
  4. https://pib.gov.in/newsite/efeatures.aspx?relid=79853
  5. https://pib.gov.in/newsite/erelease.aspx?relid=93123
  6. "Federation of Indian Chambers of Commerce & Industry", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-19, 2019-09-29 அன்று பார்க்கப்பட்டது
  7. I"Digital Unlocked", Wikipedia (in ஆங்கிலம்), 2019-09-19, 2019-09-29 அன்று பார்க்கப்பட்டது