இந்தியாவில் பெண்ணியம்

இந்தியாவில் பெண்ணியம் (Feminism in India) என்பது பல இயக்கங்களின் ஒரு தொகுதியாக விளங்குகிறது. இந்த இயக்கங்கள், இந்தியப் பெண்களுக்கான சம உரிமையைப் பற்றி விளக்குவதையும், அவர்களுக்கான சமஉரிமையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் அரசியல், பொருளாதார, மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதும் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இவ்வியக்கங்களின் சீரிய நோக்கமாகும். இந்திய சமூகத்திற்குள் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இதன் குறிக்கோளாகும். உலகின் பிற பாகங்களிலுள்ள அவர்களின் பெண்ணியல் கூட்டாளிகளைப் போலவே இந்தியப் பெண்ணியக்கவாதிகளும் பாலின சமத்துவத்தைக் கோருகிறார்கள்: பெண்களுக்கு ஆணுக்கிணையான கூலியும், சமமான படிப்பும், ஆரோக்கியமும் எளிதில் கிட்டவேண்டும். அரசியலிலும் பெண்களுக்கு சம உரிமை கிட்டவேண்டும்.[1] வாரிசுரிமைச் சட்டங்கள் மற்றும் சதி என்றழைக்கப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கம் போன்ற இந்திய சமூகத்தின் கலாச்சாரத் தொடர்புடைய சிக்கல்களுக்கு எதிராகவும் இந்தியப் பெண்ணியல்வாதிகள் போராடி வந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பெண்ணியம் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவிலிருந்து இங்கு குடியேறிய மேற்கத்திய ஆண்கள் சமூகத்தீங்கான சதிக்கு எதிராக குரல் கொடுத்தபோது முதன்முதலாக இந்தியாவில் பெண்ணியம் ஆரம்பித்தது எனலாம்.[2]
இரண்டாம் கட்டம், 1915 முதல், இந்தியா சுதந்திரம் அடைந்தவரை எனக் கொள்ளலாம். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பெண் இயக்கங்களை காந்திஜி ஒருங்கிணைத்து அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியபோது சுதந்திரமான பெண்களுக்கான அமைப்புகள் புதிதாகத் தோன்ற ஆரம்பித்தன.[3]
இறுதியாக, மூன்றாம் கட்டம் என்பது, சுதந்திரத்திற்குப் பிறகு. திருமணத்திற்குப் பிறகும்கூட பெண்கள் வேலையிலும் அரசியலிலும் தங்குதடையின்றி ஈடுபடுவதிலும் பெண்களை நியாயமாக நடத்துதலிலும் இன்றைய பெண்ணியம் கவனம் செலுத்துகிறது.[3]

இந்தியாவின் பெண்ணியம் சார்ந்த இயக்கங்கள் வளர்ச்சி கண்டபோதும், இன்றும் இந்த நவீன இந்தியாவில் வாழும் பெண்கள் பல்வேறுவிதமான பாகுபாடு சம்பந்தமான பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் குடும்பத்தலைவருக்குட்பட்ட கலாச்சாராத்தில் பெண்கள் சொத்துரிமைகளைப் பெறுவதும் ஆணுக்கிணையான கல்வியைப் பெறுவதும் போராட்டமாகவே உள்ளது.[4] இத்துடன், கடந்த 20 ஆண்டுகளில், பெண்சிசுக் கருக்கலைப்பு என்ற புதிய பிரச்சனை பெண்ணுக்கெதிராகத் தோன்றியுள்ளது.[5] இந்த அநீதிக்கு எதிராகப் போராடுவதை மிகவும் முக்கியமானதாக இந்தியப் பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள்.[6]

மேற்கத்திய நாடுகளில் உள்ளதுபோல, இந்தியாவிலுள்ள பெண்ணியல் அமைப்புகளைப்பற்றிய விமர்சனங்கள் இங்கும் உள்ளன. இவர்கள் ஏற்கனவே உரிமைகள் பெற்றுள்ள பெண்களின் மேல் மட்டுமே அக்கறை செலுத்துவதாகவும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மற்றும் கீழ் சாதிப் பெண்களை உதாசீனப்படுத்துவதாகவும் விமர்சனத்திற்குள்ளாகினர். இதுவே சாதிவாரியான பெண்ணியக்கங்களும் அமைப்புகளும் தோன்றக் காரணமாய் இருந்தது.[7]

இந்தியச் சூழமைவில் விளக்கம்

தொகு
 
பழங்குடியின விதவை மற்றும் திருமணமாகாத தனிப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவஹர், மகாராஷ்டிரா

வரலாறு

தொகு

முதல் கட்டம்: 1850–1915

தொகு

இரண்டாம் கட்டம்: 1915–1947

தொகு

1947-க்குப் பிறகு

தொகு

பிரச்சனைகள்

தொகு

பிறப்பு விகிதம்

தொகு

1991 -லிருந்து 2001-வரையிலான இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் மக்கள்தொகையில் 94.5 சிறுமிகளுக்கு 100 சிறுவர்கள் என்று இருந்த பெண்-ஆண் விகிதம் 92.7 சிறுமிகளுக்கு 100 சிறுவர்கள் என்ற விகிதமாக வீழ்ச்சியடைந்தது.[8] கேரளா போன்ற நாட்டின் சில பகுதிகள் இத்தகைய வீழ்ச்சியை அனுபவிக்கவில்லை. ஆனால், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மற்றும் மகாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் பெண்-ஆண் விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (இந்த மாநிலங்களில் பெண்-ஆண் விகிதம் 79.3 மற்றும் 87.8-க்கு இடைப்பட்டுள்ளது).[8] இது பிறப்பு விகிதப் பாகுபாட்டிற்கு சாட்சியாக விளங்குகிறது. அத்துடன் இது பெண்சிசுக் கருக்கலைப்பு எங்கும் பரவி வருவதைக் குறிப்பதாக உள்ளது. இதன் காரணமாக இந்திய நாடாளுமன்றம் கருவிலேயே பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளும் நுணுக்கங்களுக்குத் தடை விதித்தது. ஆனால் இந்தச் சட்ட அமுலாக்கம் பெருவாரியாக தவிர்க்கப்பட்டு வருகிறது.[5]

திருமணம்

தொகு

பெருவாரியான சராசரி இந்தியப் பெண்களின் வாழ்க்கை திருமணத்திலேயே கழிகிறது; இன்றும்கூட சட்டரீதியான திருமண வயதான 18 ற்குள்ளாகவே நிறையப் பெண்கள் திருமணம் புரிந்துகொள்கின்றனர். பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிகழ்வு இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்தியப் பெண்களின் முதிர்ந்த பருவத்தில் குழந்தைப்பேறும் குழந்தை வளர்ப்பும் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகையால், இந்தியப்பெண்கள் வேலைக்குச் செல்லும்போது இந்திய ஆண்களுக்கு பின்தங்கியவர்களாகிவிடுகின்றனர். நகரவாழ் இந்திய ஆண்கள் தங்களது 25 முதல் 29 வயதிற்குள் வேலைக்குச்சென்றுவிடுகின்றனர். ஆனால், நகரவாழ் இந்தியப் பெண்கள் தங்களது 40 அல்லது 44 வயதிலேயே வேலைக்குச்செல்ல முற்படுகின்றனர்.[4] இக்காரணத்தால், வேலைக்குத் தேவையான திறமையைப் பெறுவதில் பெண்களுக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளதால், தங்களின் வேலையில் முன்னேற்றம் காண மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெறுகின்றனர்.

இந்தியப் பணியாளர்களில் பெணகளின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஆண்களைவிட பெண்கள் தங்களின் படிப்பை ஆரம்பப்பள்ளியுடனோ அல்லது நடுநிலைப்பள்ளியுடனோ நிறுத்திக்கொள்கின்றனர். அத்துடன் ஆண்களைவிட பெண்களின் கல்வி அறிவு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதால், முதலாளிகளும் சட்டத்தை எளிதாக ஏமாற்றுகிறார்கள்- குறிப்பாக பெண்கள் விஷயத்தில். ஏனென்றால், இந்தியக் கலாச்சாரத்தில் ஆணைப் பெண்கள் எதிர்த்துப்பேசுவது கூடாது என்று ஆகிவிட்டது. மேலும், தொழிலாளர் சங்கங்களும் பெண்களின் தேவைகளை உணராமலே உள்ளன. பெண்களும் மனைவியாக, அம்மாவாக, குடும்பத்தலைவியாக வாழ்வதற்கு ஏற்ற வேலைகளுடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவே விரும்புகின்றனர்.[4][9]

இறையியல்

தொகு

இந்துமதப் பெண்ணியம்

தொகு

இஸ்லாமியப் பெண்ணியம்

தொகு

தாக்கம்

தொகு

பத்தொன்பதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், மேலை நாடுகளில் படித்த இந்தியர்கள் சமத்துவமத்தை அறிமுகப்படுத்தினார்கள். இருந்தாலும், 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்று தனது ஜனநாயக அரசாங்கத்தைத் தொடங்கும் வரை சமத்துவம் என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கிட்டவில்லை. இந்தியர்களின் வாழ்க்கையில் சமத்துவத்தை செயல்படுத்தும் கொள்கையும் உருப்பெறவில்லை.[10] சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசியலமைப்பு எல்லோருக்கும் சமத்துவத்தை அளித்தது. மதத்தாலோ பாலினத்தாலோ வேறுபாடு காணாத சுதந்திரத்தை அது வழங்கியது. ஒவ்வொருவரின் மதச்சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளித்தது.[11] அத்துடன், ஏழு ஐந்தாண்டுத்திட்டங்கள் பெண்களுக்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பொதுநலன்களை அளிப்பதில் மேம்பாடு கண்டுள்ளது. ஆறாவது ஐந்தாண்டுத்திட்டம் பெண்களை "முன்னேற்றத்தில் பங்குதாரர்கள்" என்றுகூட அறிவித்தது.[10]

வேலைவாய்ப்பு

தொகு

உலகமயமாக்கல்

தொகு

கல்வி

தொகு

புதுமைப்படுத்துதல்

தொகு

இந்திய பெண்ணியக்கவாதிகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Ray, Raka. Fields of Protest: Women's Movements in India. University of Minnesota Press; Minneapolis, MN. 1999. Page 13.
  2. Gangoli (2007), page 6.
  3. 3.0 3.1 Kumar, Radha. The History of Doing, Kali for Women, New Delhi, 1998.
  4. 4.0 4.1 4.2 Ray (1999), pages 25–28.
  5. 5.0 5.1 Sen, Amartya. "The Many Face of Gender Inequality." The New Republic, 17 September 2001; page 40.
  6. Gangoli (2007), page 2.
  7. Gangoli, Geetanjali. Indian Feminisms – Law, Patriarchies and Violence in India. Hampshire: Ashgate Publishing Limited, 2007. Print; pages 10–12.
  8. 8.0 8.1 Sen, Amartya. "The Many Faces of Gender Inequality." The New Republic, 17 September 2001; page 39.
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ReferenceA என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. 10.0 10.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Chaudhuri, Maitrayee 2005 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  11. Narain, Vrinda. Reclaiming the nation: Muslim women and the law in India. Toronto [Ont.]: University of Toronto, 2008.

வெளித் தொடர்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_பெண்ணியம்&oldid=3777564" இலிருந்து மீள்விக்கப்பட்டது