இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள்

இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அனுமதி பெற்று அந்தக் கல்லூரி இடம் பெற்றுள்ள மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு பல்கலைக்கழக விதிகளின்படி பாடத்திட்டங்களையும், அதற்கான தேர்வுகளையும் நடத்துகின்றன. இந்தப் பொறியியல் கல்லூரிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை

  1. அரசுப் பொறியியல் கல்லூரிகள்
  2. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்
  3. சுயநிதி பொறியியல் கல்லூரிகள்

அரசுப் பொறியியல் கல்லூரிகள்

தொகு

மாநில அரசால் நிறுவப்பட்டு, மாநில அரசு நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அரசுப் பொறியியல் கல்லூரிகள் என்று அழைக்கப்படுகிண்றன.

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்

தொகு

தனியார் அமைப்புகளால் நிறுவப்பட்டு, மாநில அரசு நிதியுதவியுடன் மாநில அரசின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு நடத்தப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் என்று அழைக்கப்படுகிண்றன.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்

தொகு

தனியார் அமைப்புகளால் நிறுவப்பட்டு, மாநில அரசின் நிதியுதவி பெறாமல் மத்திய, மாநில அரசின் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு நடத்தப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என்று அழைக்கப்படுகிண்றன.