இந்திய அணுசக்திப் பேரவை

இந்திய அணுசக்திப் பேரவை (Atomic Energy Commission, (இந்தி: भारत सरकार परमाणु ऊर्जा विभाग)) இந்திய அரசின் அணு சக்தித் துறையின் கீழ் செயல்படும் பேரவையாகும். இந்திய அணு சக்தித் துறை நேரடியாக இந்தியப் பிரதம மந்திரியின் மேற்பார்வையில் செயல்படுகிறது.[1] 1948 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார். ‎[2] அதற்கு சில மாதங்களுக்கு முனனால் இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித்துறை அமைச்சகம் நிறுவப்பெற்றது. 1954 ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் ஆணையின் படி, பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை செயல் படத் துவங்கியது. அதன் பிறகு, மத்திய அரசு இந்திய அணுசக்திப் பேரவையை அணுசக்தித்துறையின் கீழ் அமைப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து, அதை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் ஒரு நகலை பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் 1954 ஆம் ஆண்டில் பேரவை உறுப்பினர்களின் முன்வைத்தார். இப்பேரவையின் முதல் தலைவராக ஹோமி பாபா பொறுப்பேற்றார்.

இந்திய அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, அணுசக்தித் துறையின் செயலர் இப்பேரவையின் பதவி வழித் தலைவராக செயல்படுவார். ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் அறிவுரையின் படி, இக்குழுவின் இதர உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். தற்பொழுது இப்பேரவையின் தலைவராக டாக்டர் ரத்தன் குமார் சின்ஹா (Ratan Kumar Sinha) செயல்பட்டு வருகிறார்[3][4].

மேற்கோள்கள் தொகு

  1. "Department of Atomic Energy, Government of India". Dae.gov.in.. 2009-11-03. http://www.dae.gov.in./contacts.htm பரணிடப்பட்டது 2011-02-27 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-08-06
  2. ஆகஸ்டு 10‎
  3. http://www.thehindu.com/news/national/article3370898.ece
  4. http://dinamani.com/india/article1406709.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_அணுசக்திப்_பேரவை&oldid=3754182" இலிருந்து மீள்விக்கப்பட்டது