இந்திய அரசின் ஹஜ் மானியம்

ஹஜ் மானியம் என்பது இந்திய அரசால் இந்திய முஸ்லீம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு கொடுக்கப்படும் மானியம் ஆகும்.இந்த திட்டம் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் தோன்றியது.சுதந்திரத்திற்கு பின் நேரு அவர்களின் இந்திய அரசு ஹஜ் திட்டம்-1959 சட்டத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டது.[1]

இந்திய அரசின் ஹஜ் மானியம் மூலம் ஹஜ்செல்லும் இசுலாமியர்

இந்திய அரசின் ஹஜ் மானியம் மற்றும் நிதியுதவி ஏற்பாடுகள் சவுதி அரேபியா, சிரியா, ஈராக் , ஈரான், மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு இந்திய முஸ்லீம் யாத்ரகர்களுக்கு மத காரணங்களுக்கான பயணத்திற்காக பயன்படுத்தப்படும்.

சலுகை தொகு

1973 ஆம் ஆண்டிலிருந்து , இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்கும் யாத்ரீகர்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் மூலம் சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது. [2]

கி.பி.2000 ஆம் ஆண்டு முதல் , 1,50,000 முஸ்லிம்கள் மானியம் பயன்படுத்தினர். பின்னர் அளவு குறைக்கப்பட்டு கி.பி.2008 ம் ஆண்டு முதல் , 1,20,000 இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு ஆண்டும் மானியம் பயன்படுத்துகின்றனர்[3].

மானிய பயன்பாடு தொகு

ஹஜ் மானியம் புறப்படும் விமான நிலைய கட்டணம்,முஸ்லீம் யாத்ரீகர்களின் உணவு , மருத்துவ சிகிச்சை மற்றும் உறைவிடம் அடைய கட்டணம் ஆகியவை அடங்கும்.இவை அனைத்தும் இந்தியஇந்திய அரசு வழங்குகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. The Haj Committee Act,1959
  2. Press Information Bureau, "Hajj operation in India 2006" பரணிடப்பட்டது 2011-11-14 at the வந்தவழி இயந்திரம், December 2006. Retrieved 26 June 2009.
  3. Haj Assistant Travel Advertisement Ministry of Railways, Government of India, January 2014
  4. Annual Report Ministry of External Affairs, India