இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 355

இந்திய அரசியலமைப்பின் பகுதி XVIII, பிரிவு 355, இந்தியாவில் அவசர காலத்தில் கடைபிடிக்கபிடிக்க வேண்டிய விதிகளைக் கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நடைபெறும் உள் குழப்பங்கள் மற்றும் வெளிப்புற ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 355 இந்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. எடுத்துக்காட்டாக 2023 மணிப்பூர் மோதல்களை[1] கட்டுப்படுத்த, மணிப்பூர் மாநில காவல் துறை அதிகாரத்தை, அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 355இன் கீழ் இந்திய அரசின் துணைநிலை இராணுவப் படையான அசாம் ரைப்பிள்ஸ் மற்றும் இந்திய இராணுவம் தன் கையில் எடுத்துக்கொண்டது.

உள்நாட்டிலும், வெளியிலிருந்தும் எந்த வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த அரசியல் அமைப்பின் பிரிவு 355 மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏதேனும் இடையூறு அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால், அரசாங்கம் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரியான வரையறை

தொகு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355வது பிரிவின் சரியான வரையறை என்னவென்றால், "ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் உள் தொந்தரவுகளுக்கு எதிராக பாதுகாப்பது மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் அரசாங்கமும் விதிகளின்படி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமையாகும்.[2] [3]

அரசியலமைப்பு பிரிவு 355இன் படி, ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் உள் இடையூறுகளுக்கு எதிராக பாதுகாப்பது மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் அரசாங்கமும் இந்த அரசியலமைப்பின் விதிகளின்படி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது இந்திய ஒன்றிய அரசின் கடமையாகும்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் போது, அதனை எதிர்த்து நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்ய குடிமக்களுக்கு உரிமை உண்டு.

மேற்கோள்கள்

தொகு