இந்திய அரசியலமைப்புச் சட்டம் - மதம் சாதி பால் பிறப்பிடத்தால் வேறுபாடு

இந்திய அரசியலமைப்பில் (Constitution of India) மதம், சாதி, பால், இனம் மற்றும் பிறப்பிடத்தின் அடிப்படையில் வேறுபாடுகாட்டக் ( discrimination) கூடாது. ஆனால் இதற்கு சில விதி விலக்குகளும் உண்டு

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

அறிமுகம்

தொகு

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 15 தமது குடிமக்களிடம் அரசு சாதி, மதம், பால், பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் எந்த வேறு பாட்டையும் காட்டக் கூடாது என்று விதிக்கிறது. உறுப்பு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டங்களினால் அனைவருக்கும் பாதுகாப்பு என்று பொதுவான கருத்து கூறப்பட்டுள்ளது. அரசு தமது குடிமக்களிடம் வேறுபாடு காட்டக்கூடாது என்று விதித்தாலும் இதற்கு விதிவிலக்காக சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கியவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கி சட்டம் இயற்றலாம் என்றும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கறது.[1].[2][3]

உறுப்பு 15

தொகு

உறுப்பு 15(1): எந்த ஒரு குடிமகனையும் மதம்,சாதி, பால் பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையிலும் சமமாக நடத்தத் தவறக்கூடாது.[2]

உறுப்பு 15(2): கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள் பொது பொழுது போக்கு இடங்களை குடிமக்கள் அணுகும் பொழுது மதம் சாதி, பால் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் தடைவிதிப்பதோ, நிபந்தனை விதிப்பதோ கூடாது. அது போலவே அரசு நிதியால் ஏற்படுத்தப்பட்ட பொது பயன்பாடுகள் கிணறுகள் சாலைகள் போன்றவற்றின் பயன்பாட்டிலும் சாதி, மதம், பால் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் எவ்விதமான பாகுபாடும் காட்டக் கூடாது.

உறுப்பு 15(3): பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் இவ்விதிகளிருந்து விலக்களித்து சட்டம் இயற்றலாம்.

உறுப்பு 15(4): சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்குவதற்கும் தடையேதுமில்லை.

 
இந்திய பாராளுமன்றம்

முக்கிய சில வழக்குகள்

தொகு
  1. இராஜஸ்தானம் vs பிரதாப் சிங் (Rajasthan vs Pratap singh)[4]: இராஜஸ்தான் மாநிலத்தில் சில கிராமமக்கள் கொள்ளையர்களுக்குப் புகலிடம் கொடுப்பதைத் தவிர்க்க அம்மாநில அரசு அங்கு சில காவலர்களை நியமித்து, அதன் செலவை அக்கிராம மக்களே ஏற்க வேண்டும் என்றும், இச்செலவிலிருந்து அங்கு வசிக்கும் முகமதியர்களுக்கும், அரிசனங்க்களுக்கும் விலக்கு அளித்து சட்டம் இயற்றியது. இப்பாகுபாடு முறையற்றது என்று கூறி உச்சநிதிமன்றம் இச்சட்டத்தை தள்ளுபடி செய்தது.
  2. ஷேக் ஹசேன் vs ஷேக் முகமது (Sheik Hussain vs Sheik Mohammad),[5]:1861 ஆண்டு பம்பாய் நகர காவல் சட்டம், பம்பாய் நகருக்குள்ளே பிறந்த பழைய குற்றவாளிகளுக்கு விலக்கும் வெளியே பிறந்தவர்களுக்கு தண்டனையும் வழங்க வகை செய்திருந்தது. பிறப்பால் பாகுபாடு செய்யும் இந்த சட்டம் செல்லாது என்று பம்பாய் உயர்நிதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  3. டி பி ஜோசி vs ம.பி மாநிலம் ( D.P Joshi vs M.P state)[6]:மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்காக நன்கொடை பெறுவதில் மத்தியப் பிரதேச மாநிலத்தை குடியிருப்பாகக் கொண்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. இது குறித்த வழக்கில் அரசியல் சட்டம் பிரிவு 15 தடை செய்வது பிறப்பால் பாகுபாடு செய்வதைத்தான் என்றும் குடியிருப்பால் பாகுபாடு செய்வதை அல்ல என்றும் நீதிமன்றம் விளக்கம் கூறியது.
  4. யுசுப் அப்துல் அஜிஸ் vs பம்பாய் ( Yousuf abdul ashis vs Bombay)[7]:இந்திய தண்டனைச் சட்டம் 497 இன்படி மணமான பிற பெண்களிடம் முறைதவறி பாலியல் தொடர்பு கொள்ளும் ஆண்மகன் மட்டுமே தண்டனைக்குள்ளக்கப்படுகிறான். இது பிறப்பால் வேறுபடுத்தப்படும் சட்டம் என்ற வழக்கில் பெண்களுக்காக சிறப்புச்சட்டம் இயற்ற அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 15 (3) வகை செய்கிறது. ஆதலால் இது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. டாக்டர் துர்கா தாச் பாசு (2015). இந்திய அரசியலமைப்பு ஓர் அறிமிகம். Gurgaon Haryana: LexisNexis. pp. 115 to 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5143-527-3.
  2. 2.0 2.1 "இந்திய அரசியலமைப்புச் சட்டம்". Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2018-03-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |பார்த்த நாள்= ignored (help)
  3. Dr JN Pandey (2016). Constitutional Law of India. Allahabad: Central Law Agency. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84852-41-2.
  4. AIR 1960 SC 1208
  5. AIR 1951 Bom 285
  6. AIR 1955 SC 334
  7. AIR 1954 SC 32