இந்திய இசுலாமிய ஆய்வுகள் நிறுவனம்

இந்திய நிறுவனம்

இந்திய இசுலாமிய ஆய்வுகள் நிறுவனம் (Indian Institute of Islamic Studies) இந்தியாவின் புது தில்லியில் உள்ள ஓர் இசுலாமிய ஆய்வு நிறுவனம் ஆகும். [1] அக்கீம் அப்துல் அமீத் உட்பட்ட முக்கிய முசுலிம் தலைவர்களால் 1963 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டது, இவர் பின்னர் இயாமியா அம்தார்ட்டு பல்கலைக்கழகத்தை நிறுவினார், [2] இந்தியாவில் இசுலாமிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும்,. இந்த நிறுவனம் கூடுதலாக இசுலாத்தில் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகளை ஊக்குவிக்கிறது. இந்திய இசுலாமிய ஆய்வுகள் நிறுவனத்தில் இசுலாம் பற்றிய பல தொகுப்புகளின் களஞ்சியம் இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் பாரசீக மற்றும் அரபு மொழிகளில் இவை எழுதப்பட்டுள்ளன. மேலும் இசுலாத்தில் ஆய்வுகள் என்ற ஓரு காலாண்டு இதழையும் இந்நிறுவனம் வெளியிடுகிறது

1984[3] ஆம் ஆண்டு தில்லியை தளமாகக் கொண்ட இந்திய இசுலாமிய கலாச்சார மையத்தின் நிதியுதவியிலும் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Indian Institute of Islamic Studies (New Delhi, India)". University of Chicago. 6 Feb 2009. Archived from the original on 15 June 2010. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
  2. "About Jamia Hamdard". Jamia Hamdard. Archived from the original on 2011-12-23.
  3. "About IICC". IICC.

புற இணைப்புகள் தொகு