இந்திய இராணுவப் பதவிகளும், பதவிச் சின்னங்களும்

இந்திய இராணுவத்தில் பணிபுரிபவர்களை ஆணைய அதிகாரிகள் (Commissioned Officer), இளைய ஆணைய அதிகாரிகள் (Junior Commissioned Officer) மற்றும் பிற தர வரிசையினர் என மூன்றாகப் பிரிப்பவர். இத்தர வரிசை மற்றும் பதவிச் சின்னங்கள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்காலத்திலிருந்து சில மாற்றங்களுடன் தொடர்கிறது.

இந்தியத் தரைப்படை அதிகாரிகளுக்கு இணையான இந்தியக் கடற்படை மற்றும் இந்திய வான்படை அதிகாரிகளுக்கான பதவிச் சின்னங்கள் (click to enlarge)

பதவிகள் மற்றும் பதவிச் சின்னங்கள்

தொகு

ஆணையத் தர அதிகாரிகள் (Commissioned officers)

தொகு

இராணுவப் பயிற்சி பெறும் அதிகாரிகளை அதிகாரி மாணவர்கள் என்று அழைப்பர். அவர்களுக்கு அதிகாரிகளுக்கான சீருடை மட்டும் வழங்கப்படும். பதவி மற்றும் பதவிச் சின்னம் வழங்கப்படாது. இராணுவப் பயிற்சி முடித்து குறிப்பிட்ட ரெஜிமெண்டுகளில் சேர்ந்த அதிகாரிகளுக்கு உரிய நிறங்களில் சீருடை வழங்கப்படும்.

பதவி விளக்கம் பதவிச் சின்னம் கழுத்துப் பட்டை[1] குறிப்பு[2][3] ஓய்வு வயது
பீல்டு மார்ஷல்   லாரெல் மாலைக்குள் குறுக்குவெட்டு வாள் மற்றும் மற்றும் அதன் மேல் அசோகச் சக்கரம், தங்க நிற பட்டன் இதுவரை இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெனரல் (General)   4 நட்சத்திரங்கள் மற்றும் தங்க நிற லாரெல் மாலை ஊதிய தரவரிசை 18 - மாத ரூபாய் 250,000
லெப்டிண்ட் ஜெனரல் (Lieutenant General)   ஊதிய தரவரிசை எண் 17, ஊதியம் ரூபாய் 225,000
மேஜர் ஜெனரல் (Major General)   ஊதிர தர வரிசை எண் 14, ஊதிய விகிதம் 144,200–218,200
பிரிகேடியர்   ஊதிய தரவரிசை எண் 13A, ஊதிய விகிதம் 139,600–2,17,600
கர்ணல்   ஊதிய தரவரிசை எண் 13, ஊதிய விகிதம் 130,600–215,900
லெப்டினண்ட் கர்ணல்   ஊதிய தரவரிசை எண் 12A, ஊதிய விகிதம் 121,200–212,400
மேஜர் அசோகச் சக்கரம்   ஊதிய தரவரிசை எண் 11, ஊதிய விகிதம் ரூபாய் 69,400–207,200
மேஜர் மூன்று நட்சத்திரம்   ஊதிய தர வரிசை எண் 10பி, ஊதிய விகிதம் 61,300–193,900
லெப்டினண்ட் 2 நட்சத்திரம்   ஊதிய தரவரிசை எண் 10, ஊதிய விகிதம் 56,100–177,500
மாணவ அதிகாரி (Officer Cadet) தோள்பட்டையில் பயிற்சி நிறுவனத்தின் பெயர் பதவிச் சின்னம் இல்லை நிரந்தர உதவித்தொகை

இளைய ஆணையத் தரம் பெற்ற அதிகாரிகள் (Junior commissioned officers)

தொகு
பதவி விளக்கம் தோள் பட்டை சின்னம் ஓய்வு வயது
தரைப்படை கவச வாகனம் & பீரங்கிப்படை
சுபேதார் மேஜர் ரிசால்தார் மேஜர் [ தங்க நிற அசோகச் சக்கரம் மற்றும் சிவப்பு & மஞ்சள் பட்டை   34 ஆண்டு பணி அல்லது 54 வயது- இதில் எது முன்னதோ அது [4]
சுபேதார் ரிசால்தர் இரண்டு தங்க நட்சத்திரங்கள் மற்றும் சிவப்பு & மஞ்சள் பட்டை   30 ஆண்டு பணி அல்லது 52 வயது- இதில் எது முன்னதோ அது [4]
நயிப் சுபேதார் நயிப் ரிசால்தர் ஒரு தங்க நட்சத்திரம் மற்றும் சிவப்பு & மஞ்சள் பட்டை   28 ஆண்டு பணி அல்லது 52 வயது- இதில் எது முன்னதோ அது [4]

ஆணயத் தகுதியில்லா வீரர்கள் (Non-Commissioned Officer) ("NCOs")

தொகு
பதவி விளக்கம் சின்னம் ஓய்வு வயது
தரைப்படை கவசப் படை
ஹவில்தார் டபேதார் முப்பட்டைகள்   26 ஆண்டு பணிக்குப் பின் அல்லது 49 வயது - இதில் எது முன்னதோ அது[4]
நாய்க் லான்ஸ் டபேதார் இரண்டு பட்டைகள்   23 ஆண்டுக்கு பணிப் பின் அல்லது 49 வயது - இதில் எது முன்னதோ அது.[4]
லான்ஸ் நாய்க் தற்காலிக லான்ஸ் டபேதார் ஒரு பட்டை   19 ஆண்டு பணிக்குப் பிறகு அல்லது 48 வயது -இதில் எது முன்னதோ அது.[4]

சிப்பாய்கள்

தொகு
பதவி சின்னம் பணி ஓய்வு
தரைப்படை கவசப் படைகள்
சிப்பாய் சோவார் பதவிச் சின்னம் இல்லை 15 ஆண்டு 56 நாள் சேவைக்குப் பின் அல்லது 42 வயது - இதில் எது முன்னதோ அது.[4]

ஓய்வு பெற்ற அதிகாரிகள்:பதவிப் பெயரை இட்டுக்கொள்ளும் முறை

தொகு

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் தங்கள் பெயருடன், வகித்த பதவிப் பெயரை எவ்வாறு இட்டுக்கொள்வது என இந்திய இராணுவத்தின் 21 சூலை 2014 நாளின் சுற்றறிக்கையில் குறித்துள்ளது. எடுத்துக்காட்டாக ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரி தனது பெயருக்கு முன்னாள் பிரிகேடியர் xxxxx (பணி ஓய்வு) என இட்டுக்கொள்ள வேண்டும்.[5]எடுத்துக்காட்டு பிரிகேடியர் சந்த் சிங் (பணி ஓய்வு) என இட்டுக் கொள்ள வேண்டும். இதன் பொருள் இராணுவப் பதவி ஒரு போதும் ஓய்வு பெறுவதில்லை; ஓய்வு பெறுவது இராணுவ அதிகாரி மட்டுமே.[5]பணி ஓய்வு பெற்று இறந்த இராணுவ அதிகாரிகளுக்கும் இந்நடைமுறை பொருந்தும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "How to Distinguish between Different Ranks of The Indian Army?".
  2. "Army Pay Rules" (PDF). MoD. GoI. MoD. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
  3. Army, Indian. "NCC SPL ENTRY NOTIFCATION" (PDF). Indian Army Offl website. Indian Army. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Report of the Seventh Central Pay Commission" (PDF). Government of India. November 2015. pp. 397–398. பார்க்கப்பட்ட நாள் 4 April 2021.
  5. 5.0 5.1 5.2 Sura, Ajay (3 August 2014). "Rank never retires, officer does: Army". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. http://timesofindia.indiatimes.com/india/Rank-never-retires-officer-does-Army/articleshow/39538647.cms.