இந்திய தேசிய வேதியியல் ஒலிம்பியாடு
இந்திய தேசிய வேதியியல் ஒலிம்பியாடு (The Indian National Chemistry Olympiad) இந்தியாவில் வேதியியல் துறைக்காக நடத்தப்படும் ஒரு தேர்வு நிகழ்வாகும்.
இந்திய தேசிய வேதியியல் ஒலிம்பியாடு தேர்வின் எழுதுத் தேர்வு ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தின் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. இந்திய வேதியியல் ஆசிரியர் கூட்டமைப்பு இத்தேர்வை நடத்துகிறது. 11,12 ஆம் வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவர்கள் முதலில் நவம்பர் மாதத்தில் நடைபெறும் தேசிய வேதியியல் தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். தேசிய வேதியியல் தரத்தேர்வில் பங்கேற்கும் 30,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மாணவர்களிள், 1% மாணவர்கள் மட்டுமே ஒலிம்பியாடு தேர்வுக்கு தெரிவு செய்யப்படுகிறார்கள்.
தகுதிக்கான எழுத்துத் தேர்வில் இருந்து 35 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதிலிருந்து 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பையிலுள்ள ஓமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் நடைபெறுகின்ற நோக்குநிலை-மற்றும்-தேர்வு-முகாமிற்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்திய தேசிய வேதியியல் ஒலிம்பியாடு போட்டிக்கு தகுதிபெறும் பெரும்பாலான மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர்கள்.[1] இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், மாணவர்கள் பதினொன்றாம் அல்லது பத்தாம் வகுப்பு முடிவிலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நோக்குநிலை-மற்றும்-தேர்வு-முகாம் வேதியியல், கோட்பாடு மற்றும் பரிசோதனையில் கடுமையான பயிற்சி மற்றும் சோதனை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பன்னாட்டு வேதியியல் ஒலிம்பியாடு போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த இங்கு சிறந்த நான்கு பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இக்குகுழு ஒலிம்பியாடு போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு ஓமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் வேதியியல் கோட்பாடு மற்றும் சோதனைகளில் கடுமையான பயிற்சியை மேற்கொள்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Most important 10 tricks to prepare well for the Indian Chemistry Olympiad (INChO)| Kaitholil.com". kaitholil.com. Archived from the original on 2022-08-12. பார்க்கப்பட்ட நாள் 2022-08-12.
வெளியிணைப்புகள்
தொகு- Information about India at the Science Olympiads பரணிடப்பட்டது 2015-12-23 at the வந்தவழி இயந்திரம்