இந்திய நிறுமங்கள் சட்டம், 1956
இந்திய நிறுமங்கள் சட்டம்-1956 (The Companies Act 1956) என்பது, இந்தியாவில் நிறுமங்களை ஒழுங்குபடுத்த உருவாக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். நிறுமம் (Company) என்பது சில நபர்கள், தாமாகவே முன்வந்து கூட்டாக இணைந்து ஏதேனும் ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டு அதில் கிடைக்கும் இலாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் அமைப்பு. இந்திய நிறுமங்கள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற இத்தகைய கூட்டமைப்புகள், நிறுமம் என்ற அந்தஸ்தை பெறுகின்றன.
The Companies Act, 1956 | |
---|---|
சான்று | Act No. 1 of 1956 |
இவ்வாறு பதிவு செய்து கொள்வதால் பின்வரும் நன்மைகள் கிட்டுகின்றன:
1.சுயேச்சையான ,சட்டபூர்வமான அமைப்பு
2.வரையறுக்கப்பட்ட பொறுப்பு
3.எப்போதும் தொடர்ந்து நீடித்தல்
உறுப்பினர்கள் வரலாம் - போகலாம் .ஆனால் நிறுவனம் அப்படியே இருக்கும். எப்படி மனிதர்கள் வந்தாலும் போனாலும் ஆறு மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறதோ அது போல நிறுமமும் எப்போதும் இருக்கும். சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை மனிதனை சட்டம் மட்டுமே அழிக்க முடியும்.ஒரு நிருமத்தைப் பதிவு செய்தவர்கள் அனைவரும் உடனடியாக இறந்துவிட்டாலும் கூட நிறுமம் அப்படியே இருக்கும்.இறந்து போன உறுப்பினர்களின் சட்டபூர்வமான வாரிசுகள் , நிறுமத்தைத் தொடர்ந்து நடத்துவார்கள்.(அரசன் இறந்து விட்டான்.அரசாங்கம் வாழட்டும்! - என்பது போல)
4.பங்குகளை மாற்றிக் கொள்ளும் வசதி
ஓர் உறுப்பினர் , தாம் வைத்திருக்கும் பங்குகளை பிறருக்கு விற்கலாம்.பொது நிறுமத்தின் பங்குகளை , சந்தையில் விற்கும் பிற பொருட்களைப் போல,வாங்கவோ விற்கவோ முடியும்.
5.கணக்கில் அடங்காத உறுப்பினர்கள்
தனிப்பட்ட நிறுமங்களின் அதிக பட்ச எண்ணிக்கை வரையறுக்கப் பட்டிருந்தாலும் பொது நிறுமங்களில் எத்தனை உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
6.ஏராளமான மூலதனத்தைப் புரட்டும் வசதி
தனியொரு மனிதனால் புரட்ட முடியாத மிக அதிகமான மூலதனத்தை பல்வேறு மனிதர்கள் கூட்டாகச் சேருவதால் புரட்ட முடியும்.மேலும் , ஒருவரின் பொறுப்பு வரையறுக்கப் பட்டிருப்பதால் அவருக்கு பெரும் நட்டம் எதுவும் வந்து விடாது.
7.நிறுமம், தனது பெயரிலேயே சொத்துக்களை வைத்துக் கொள்ளும் உரிமை
நிறுமம் என்பது சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மனிதன் ஆகும்.இயற்கை மனிதனைப் போலவே நிறுமமும் தன பெயரில் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்.ஒரு நிறுமம், பிற மனிதர்களின் மீதோ அல்லது பிற நிறுமங்களின் மீதோ வழக்கு தொடரலாம்.அதே போல் மற்றவர்களும் ஒரு நிறுமத்தின் மீது வழக்கு தொடரலாம்.
8.நிறுமத்தை நிர்வாகம் செய்வதும் கட்டுப்படுத்துவதும் எளிது.
ஒரு நிறுமத்தை அதன் இயக்குனர் குழு நிர்வாகம் செய்கிறது.
உள்ளடக்கம்
தொகுநிறுமங்களின் வகைகள்
தொகுஇந்திய நிறுமங்கள் சட்டத்தின்படி , பலவிதமான வடிவங்களில் நிறுமங்களை உருவாக்கி பதிவு செய்து கொள்ளலாம். அடிப்படையான இரண்டு வகைகள் :
- தனிப்பட்ட நிறுமங்கள்
- தனிப்பட்ட நிறுமங்களில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டாகவும் உயர்ந்த பட்ச எண்ணிக்கை ஐம்பதாகவும் இருக்கும்.
- தனிப்பட்ட நிறுமங்களின் பங்குகளை வைத்திருப்போர், தங்கள் விருப்பப்படி அவற்றை யாருக்கு வேண்டுமானாலும் விற்க முடியாது
- பொது நிறுமங்கள்
- பொது நிறுமங்களில் குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாகும். உயர்ந்த பட்ச எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
- பொதுநிறுமங்களின் பங்குகளை வைத்திருப்போர், தங்கள் விருப்பப்படி அவற்றை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.
இந்த இரண்டு வகையிலும், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் மற்றும் அளவற்ற பொறுப்பு நிறுமம் ஆகிய இரண்டு வகைகளும் உருவாக்கப்படலாம். வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமங்களின் பொறுப்பைப் பொறுத்து கீழ் காணும் நிரும வகைகள் உருவாகின்றன:
- பங்குகளினால் வரையறுக்கப்பட்டவை
- உறுதியளிப்பினால் வரையறுக்கப்பட்டவை
- பங்கு மற்றும் உறுதியளிப்பு இரண்டினாலும் வரையறுக்கப்பட்டவை
இவை தவிர பாராளு மன்றத்தின் சிறப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நிறுமங்கள், இலாப நோக்கம் இல்லாத நிறுமங்கள் மற்றும் அரசு நிறுமங்கள் எனவும் பல்வகை நிறுமங்கள் உள்ளன.
வரையறுக்கப்பட்ட பொறுப்பு
தொகுஒரு நிறுமத்தின் பங்குகளை வாங்கிக்கொள்பவர் , அந்த நிறுமத்தின் உறுப்பினர் ஆகிறார். வரையறுக்கப்பட்ட நிறுமத்தின் பங்குகளை வைத்திருப்பவர் , பங்குகளின் முக மதிப்புக்கு சமமான தொகையை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தி இருப்பார். ஒருவேளை இந்த நிறுமம் நட்டத்தில் மூழ்கி விட்டால் உறுப்பினர்களின் நிலை என்ன?அவர்கள் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் முக மதிப்பை செலுத்தி இருந்தால் அதுவே போதும்.முக மதிப்பை முற்றிலுமாக செலுத்தாதவர்கள் , அந்தத் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.தனியார் நிறுவனம் போல எல்லா நட்டத்தையும் தனியொரு மனிதன் தாங்க வேண்டியதில்லை.
தனிப்பட்ட நிறுமம்
தொகுபொது நிறுமம்
தொகு- குறைந்த பட்சம் ஏழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும்
- அதிக பட்சம் எவ்வளவு உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்
- உறுப்பினர்கள், தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை பங்கு சந்தையின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.
- பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர் இறந்து விட்டால், அவருடைய சட்ட பூர்வமான வாரிசு ,அந்த பங்குகளைப் பெறுவதன் மூலம் நிறுமத்தின் உறுப்பினர் ஆகிறார்.
தனிப்பட்ட நிறுமத்திற்கும் பொது நிறுமத்திற்கும் உள்ள வேறுபாடுகள்:
தனிப்பட்ட நிறுமம் பொது நிறுமமாக மாறுதல்: