இந்திய மண் வகைகள்

இந்திய மண் வகைகளை (Major soil deposits of India) வண்டல மண், காிசல் மண், செம்மண், செம்புரை மண்]] பாலைநில மண், காட்டு மண், சதுப்பு மண் என்று ஏழு பெரும் பிாிவுகளாகப் பிாிகின்றன. இவற்றைத் தவிர, உப்பு, காரமண்ணும் குறிப்பிடத்தக்க மண் வகையாகும். வண்டல் மண் வட இந்தியச் சமவெளிகளிலும், காிசல் மண், செம்மண், செம்புரை மண் ஆகியன தீவக இந்தியாவிலும் காணப்படுகின்றன. தீவக இந்தியாவிலுள்ள மண் அவை அமைந்துள்ள இடங்களிலேயே தோன்றியுள்ளன. வட இந்தியச் சமவெளிகளில் காணப்படும் மண் பெரும்பாலும் ஆறுகளால் கடத்தப்பட்டு படிந்த மண்ணாகும். இவை பலவகை வேதியியல் இயல்புகளைப் பெற்றுள்ளன. சுந்தர வண அலையாத்திக் காடுகள் வளமிக்க சதுப்பு மண் நிறைந்த பகுதியாகும்.

எல்லைப் பகுதி

வண்டல் மண் தொகு

இந்தியாவின் மண் வகைகளில் வண்டல் மண் மிகப் பெரும் பரப்பில் காணப்படுகின்றது. மக்கள் தொகை மிகுந்துள்ள 1.5 மில்லியன் ச.கி.மீ. பரப்பில் வண்டல் மண் காணப்படுகின்றது. வேளாண்மையைப் பொறுத்த மட்டிலும் வண்டல்மண் மிகச் சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆறுகளின் படிவுகளால் வண்டல்மண் ஏற்படுகிறது. வட இந்தியச் சமவெளியில் பெரும்பகுதியில் வண்டல் மண் பெரும்பாலும் காணப்படுகிறது. மட்குபொருள் நிறந்த வண்டல் மண் இமயமலையின் மூன்று பெரும் ஆறுகளான, சிந்து ஆறு, கங்கையாறு பிரம்மபுத்திரா ஆறு நெடுக படிகின்றன. தீவக இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் உள்ள ஆற்றுப் படுகைப் பகுதிகளிலும், மகாநதி, நர்மதை, தபதி, கோதாவரி, கிருட்டினா, காவிரி ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், குசராத்தின் வடபகுதியிலும், சட்டீசுகர் சமவெளியிலும் வண்டல் மண் காணப்படுகிறது. இந்தியக் கிழக்கு கடற்கரைச் சமவெளிப் பகுதிகளிலும் வண்டல் மன காணப்படுகிறது. களிமண் மணல் கலப்புமிக்க மண்ணாக இருப்பதால் நிலத்தை உழுவது எளிதாக உள்ளது. இந்த மண் காணப்படும் பகுதிகளில் நீர் வசதி இருந்தால் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும். புவி அமைப்பியலின்படி வண்டல் மண்ணை இரு பிாிவுகளாகப் பிாிக்கலாம்.. வெள்ளச் சமவெளி, படுகை, தாழ் நிலங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும் புதிய வண்டல் மண்ணைக் "காதர்" என்று கூறுவர். வெள்ளநீர் அடைய முடியாத உயர்நிலப் பகுதிகளில் காணப்படும் பழைய வண்டல் மண்ணைப் "பாங்கர்" என்று கூறுவர். பாங்கர் மண்ணின் கீழ் அடுக்குகளில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றன. பாங்கர் மண்ணை விட காதர் மண்ணில் மணல் அதிகமாக கலந்து உள்ளது.

இவற்றில் சுண்ணச் சத்து, பாசுவரச் சத்து, பொட்டாசிய உப்புகள் நிறைந்திருப்பதாலும் இவற்றின் நீரேந்துதிறம் கூடுதலாக அமைவதாலும் இவை கரும்பு, நெல், கோதுமை, சிறுகூலங்கள், பருப்பு வகைகள் பயியிட ஏற்றவை.

மலைசார் மண் வகைகள் தொகு

மலையும் மலைசார்ந்த இட மண் வகைகள், இமாலயப் பள்ளத்தாக்குகளிலும் சரிவுகளிலும் 2500 மீ முதல் 3000 மீ குத்துரங்களில் காணப்படுகின்றன. இவை இன்னமும் ஆய்வில் உள்ளன. இப்பகுதி தாவரக் கவிப்புகள் தாவர வகைபாட்டுக்கு உதவுகின்றன.னைம்மண்ணின் கரியக் காலக விகிதம் அகன்ற நெடுக்கத்தில் அமைகிறது. இவை மண்யாப்பில் மணற்களிமண் முதல் களிமண் வரை வேறுபடுகின்றன. இவை பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

பாலைநில மண் தொகு

இவை இந்தியாவில் குசராத், இராசத்தான் மாளங்களி உள்ள தார் பாலவனத்தில் காணப்படுகின்றன. இம்மண் மழை அருகிய வறட்சி நிலைமைகளில் உருவாகிறது. இவ்வகை மண் தாழ் அடர்த்தியும் உயர் நீர்சுவருதிறமும் கொண்டது. இதன் தாங்குதிறமும் நறுக்கு வலிமையும் உயர மண் அடர்த்தியைக் கூட்டவேண்டும். இதில் பயிராகும் வழக்கமான தாவரம் காக்டசுகள் ஆகும்.

காிசல் மண் தொகு

தக்காண லாவா பீடபூமியில் காிசல் மண் காணப்படுகின்றது. இது கறுப்பு நிறத்தில் உள்ளது. மழை வீழ்ச்சி குறைவாக உள்ள பசால்ட் பாறை உள்ள பகுதிகளில் காிசல் மண் உருவாகிறது. தமிழ் நாட்டில் நைஸ், கிரானைட், போன்ற பாறைகள் உள்ள பகுதிகளில் உள்ள மித வறட்சியான காலநிலை உள்ள இடங்கள் உள்ள காிசல் மண் காணப்படுகிறது. மஹாராஷ்ட்ர மாநிலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தின் மேற்குப்பகுதி, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் காிசல் மண் காணப்படும் முக்கியப் பகுதிகளாகும். பசால்ட் பாறை சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் மிகுந்ததாக உள்ளது. நைஸ், கிரானைட் சிதைவுறுவதால் தோன்றும் காிசல் மண் அடுக்கு ஆழம் குறைந்ததாக உள்ளது. இக்களிமண் ஒட்டும் தன்மை உடையதாக உள்ளது. அதனால் நிலத்தை உழுவது கடினமாக உள்ளது. லாவா பகுதியாக இருப்பதால் காிசல் மண்ணில் உயிர்ச்சத்து வளம் குறைவாக உள்ளது. பொதுவாக காிசல் மண்ணில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருக்கும். மண்ணின் கீழ் அடுக்கில் சுண்ணாம்புத் துகள்கள் காணப்படுகின்றன. களிமண் கலப்பு மிகுந்துள்ள ஆழமான மண்ணடுக்கு உள்ள ஆற்றுப்பள்ளத்தாக்குகளிலும், தாழ்நிலப்பகுதிகளிலும் காிசல்மண் வளமிக்க மண்ணாக உள்ளது. நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை இருப்பதால் மஹாராஷ்ட்ரா போன்ற நீர் பாசன வசதி குறைந்த பகுதிகளில் நீண்ட வறட்சிக் காலத்தில் தாவரங்களுக்குத் தேவையான நீரை காிசல் மண் தருகின்றது. மண் அடுக்கின் கணத்தைப் பொறுத்து நீாின் அளவு இருக்கும். குன்றுகள், சாிவு மிகுந்த பகுதிகள் ஆகியவற்றில் மணல் கலப்பு மிகுந்த மண் காணப்படுவதால் வளமற்றதாக உள்ளது.

செம்மண் தொகு

செம்மண் வெதமான மிதவெப்ப மண்டல, ஈரப்பதக் காலநிலை உள்ள இலையுதிர் காடுகளோ அல்லது கலப்புக் காடுகளோ அமைந்த பகுதிகளில் உருவாகிறது. இது வண்டலற்ற செம்மண் மேல் கவிந்த, மஞ்சட்பழுப்பு கலந்த அடுக்குப் படிவு மீது படர்ந்த மெல்லிய கரிம, கரிமக் கனிம அடுக்குகளாகும். செம்மண் படிக அமைப்புப் பாறைகளில் இருந்து உருவாகிறது. இதில் ஊட்டச் சத்தும் மட்குபொருட்களும் குறைவாக இருப்பதாலும் நீர் தங்குதிறக் குறைவாலும் தாவர வளர்ச்சிக்கு உகந்தது அன்று.

செம்புரை மண் தொகு

செம்புரை மண் பாறைகலின் வேதிச் சிதைவால் உருவாகிறது. இம்மண்ணில் முதன்மையாக இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் வெளிர்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இம்மண் வகைகள் நடுவண், கிழக்கு, தெற்கு இந்தியப் பகுதிகளி அமைகின்றன. இவை பசால்ட்டின் எச்சப் படிவுகளாகும். இவை உயர் அடர்த்தி கொண்டவை. இம்மண்ணில் பெரிதும் கால்சைட்டுப் படிவுகள் கல்ந்திருக்கும். இவை முந்திரிக் காடுகள் வளர்க்க ஏற்றவை.

காட்டு மண் தொகு

இந்தியாவில் ஏறத்தாழ 285,000 ச.கி.மீ. பரப்பில் மழைக் காடுகள் உள்ள குறிஞ்சி(மலையும் மலைசார்) நிலப் பகுதியில்காட்டு மண் காணப்படுகிறது. உயிரிப் பொருட்கள் அதிகமாக இருப்பதால் உயிர் சத்து வளம் அதிகமாக உள்ளது. இமயமலையின் அடிவாரப்பகுதிகள், இமாச்சலப்பிரதேசம், அசாம், மேற்குத் தொடர்ச்சி மலையின் சில பகுதிகள் ஆகிய இடங்கள் காட்டு மண் காணப்படும் சில முதன்மைப் பகுதிகளாகும். கிட்டதட்ட 60 செ.மீ. அளவுக்கும் குறைவான மழை வீழ்ச்சியுள்ள இராஜத்தான் மாநிலத்தின் பெரும்பகுதி, தென் பஞ்சாப், தெற்கு ஆரியானா ஆகிய பகுதிகளில் கிட்டதட்ட 142,000 ச.கி.மீ. பரப்பில் பாலைவன மண் காணப்படுகிறது. நுண்ணிய மணல் துகள்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படுவதால் பெரும் துகள்கள் காணப்படுகின்றன. இந்த மண்ணில் தழைச்(நைட்ரஜன்) சத்து மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.

கடற் படிவுகள் தொகு

இவை இந்திய வடமேற்கு கடலோரத்தில் குருகிய அடிப்பகுதியில் காணப்படுகின்றன. இவை குறைந்த நறுக்கு வலிமையும் உயர் அமுங்குதிறமும் கொண்டவை. கடற்களிமண் மென்மையும் உயர் குழைவுதிறமும் உள்ளவை. இவற்றில் கரிமப் பொருட்கல் பேரளவில் கலந்திருப்பதால், பெருங்கட்டமைப்புகளுக்கு, குறிப்பாகக் கட்டிடங்களுலுக்கும் ஓந்தி எந்திரங்களுக்கும் ஏற்றதல்ல.[1][2]

உப்பு, கார மண் தொகு

வடிகால் வசதியற்ற வண்டல் மண் உள்ள பகுதிகளில் உப்பு, காரமண் காணப்படுகிறது. மழை வீழ்ச்சி மிகுந்துள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு, மேற்கு வங்காளம், பீகாரின் வடபகுதி ஆகியவற்றில் உப்பு சத்துக்கள் குறைவாக உள்ளன. கடற்கரையோரமாக உள்ள பகுதிகளில் மண்ணில் உப்பு சத்து அதிகமாக உள்ளது. மழை வீழ்ச்சி குறைவாகவுள்ள வடமேற்குப் பகுதிகளில் காரமண் காணப்படுகிறது. சோடியம், சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியன மண்ணின் மேல் அடுக்கில் படிந்து காணப்படுகின்றன. இதைக் களர் மண் எனக் கூறுவர் மழை வீழ்ச்சி குறைவாகவும், நீராவியாதல் தீவிரமாகவும் இருப்பதால், தரையின் மீது உப்புகள் படிகின்றன. இந்தப் பகுதிகளில் தாவர வளர்ச்சி இருப்பதில்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர வனப்பகுதிகள், ஒரிசாவின் கடற்கரைப்பகுதி, பீகாரின் வட பகுதி, உத்திரப்பிரதேசத்தின் அல்மோரா மாவட்டம், தமிழ் நாட்டின் தென் கிழக்குப்பகுதி, கேரளாவின் குட்டநாட்டுப்பகுதி ஆகியன சதுப்பு மண் காணப்படும் பகுதிகளாகும்.

உலகின் முக்கிய மண் வகைகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் மண் வளம் ஓரளவு அதிகமாக உள்ளது. எனினும் இந்தியாவிலுள்ள மண் வகைகளில் உயிர் சத்தும், நைட்ரஜனும் குறைவாக உள்ளன. இந்தியாவில் மண் அரிப்பு பெரும் பிரச்சனையாகும். நிலத்தின் தன்மை, நிலத்தின் சரிவு, மண்ணின் தன்மை, மழையின் அளவு, தாவர மூட்டம், மண் பராமரிப்பு ஆகியவற்றைப் பொறுத்து மண் அரிப்பு காணப்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. soil mechanics and foundation engineering by Dr. K.R. ARORA.
  2. "Civil engineering hub". பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மண்_வகைகள்&oldid=3869256" இலிருந்து மீள்விக்கப்பட்டது