இந்திய மேன்மைக் கோப்பை
இந்திய மேன்மைக் கோப்பை (Indian Super Cup அல்லது நிதியாதரவு காரணங்களுக்காக ஓஎன்ஜிசி இந்திய மேன்மைக் கோப்பை) என்பது இந்தியாவில் ஒவ்வோராண்டும் நடைபெறும் கழகக் கால்பந்துப் போட்டியாகும். இது ஐ-கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் கூட்டமைப்புக் கோப்பை வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்படுகிறது. ஒருவேளை ஐ-கூட்டிணைவு வாகையர்களே கூட்டமைப்புக் கோப்பையையும் வென்றிருந்தால் ஐ-கூட்டிணைவில் இரண்டாம் இடம் பெற்றோர் விளையாடுவர். வாகையருக்கு ஒரு கேடயம் பரிசுக் கோப்பையாக வழங்கப்படும். அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பதக்கமும் பரிசளிக்கப்படும்.[1]
தோற்றம் | 1997 |
---|---|
மண்டலம் | இந்தியா |
அணிகளின் எண்ணிக்கை | 2 |
தற்போதைய வாகையாளர் | East Bengal |
இப்போட்டியின் தற்போதைய வாகையர் கிங்ஃபிஷர் ஈஸ்ட் பெங்கால் அணியினராவர். அவர்கள் இறுதியாட்டத்தில் சால்கோஆகார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 9-8 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.