கூட்டமைப்புக் கோப்பை (இந்தியா)

கூட்டமைப்புக் கோப்பை (Federation Cup (India) - Fed Cup) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கால்பந்துப் போட்டியாகும். இது தோற்றால்-வெளியே (Knockout) முறையில் நடத்தப்படுகிறது. இப்போட்டி 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1996-இல் தேசிய கால்பந்துக் கூட்டிணைவு (NFL, தற்போது ஐ-கூட்டிணைவு) தொடங்கப்படுவதற்கு முன்புவரை, இப்போட்டியே தேசிய அளவில் முதன்மையான கழக கால்பந்துப் போட்டியாகும். இப்போது, ஐ-கூட்டிணைவுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான போட்டியாக இதுவுள்ளது. மேலும், ஐ-கூட்டிணைவின் கூட்டிணைவுக் கோப்பையாக இப்போட்டி உள்ளது. இதில் வாகைசூடும் அணி கண்ட அளவிலான போட்டியான ஏஎப்சி கோப்பையில் ஆடுவதற்குத் தகுதி பெறுகிறது.

கூட்டமைப்புக் கோப்பை (இந்தியா)
தோற்றம்1977
மண்டலம் இந்தியா
அணிகளின் எண்ணிக்கை22
இணையதளம்the-aiff.com
2011 Indian Federation Cup

மேலும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு