இந்திராசன்

இந்திய மலைச் சிகரம்

இந்திராசன் மலை (Indrasan) இமாச்சலப் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 6221 மீட்டர் உயரத்தில் இந்திரசன் மலை அமைந்துள்ளது. [1]இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் ஏறுவதற்கு மிகவும் கடினமான மலையாக இந்திரசான் மலை கருதப்படுகிறது. ஏனெனில் அதை அளவிடுவதில் அதிகளவில் சவால்கள் உள்ளன. அக்டோபர் 13, 1962 அன்று யப்பானின் கியோத்தோவிலுள்ள கியோத்தோ பல்கலைக்கழக ஆல்பைன் சங்கம் ஏற்பாடு செய்த ஒரு பயணத்தின் மூலம் முதன்முதலில் ஏறப்பட்டது. [2]

இந்திரன் பூமிக்கு வரும்போதெல்லாம் இங்கு வசிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்திராசன் (இரண்டு வார்த்தைகளால் ஆனது: இந்திரன் மற்றும் ஆசனம்) அதாவது இந்திரனின் அரச இருக்கை.

சான்றுகள் தொகு

  1. "Indian Mountaineering Foundation". www.indmount.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  2. "THE ASCENTS OF INDRASAN AND DEO TIBBA : Himalayan Journal vol.24/13". www.himalayanclub.org. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராசன்&oldid=3507390" இலிருந்து மீள்விக்கப்பட்டது