இந்திராணி (சப்தகன்னியர்)
(இந்திராணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திராணி (ⓘ) அல்லது ஷசி, (Indrani or Shachi) (Indra's queen or Speech), ; (சமசுகிருதம்): शची;), துவக்க வேத கால நாகரீகத்தில், இந்து சமயத்தில் ஏழு புகழ் மிக்க பெண் கடவுளர்களில் (சப்தகன்னியர்) ஒருவராக கருதப்படுபவர். இவளை ஐந்திரி என்றும் இந்திரா தேவி, ராஜேந்திரி, மகேந்திரி, நரேந்திரி என்றும் பௌமன் என்ற அசுர மன்னனின் மகள் என்பதால் பௌலோமி என்றும் வேதங்கள் அழைக்கிறது. இந்திரனின் மனைவியான இந்திராணி மிக அழகானவர். இந்திராணி சிங்கம் மற்றும் யானைகளுடன் தொடர்புடையவர். ஜெயந்தன் மற்றும் ஜெயந்தி (தெய்வானை), சித்திரகுப்தர் ஆகியோரின் தாயாவாள்.
ஆதார நூல்கள்
தொகு- Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0379-5) by David Kinsley
- The Hindus: An Alternative History By Wendy Doniger