இந்திராபுரம்
இந்திராபுரம் (Indirapuram) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு குடியிருப்பு பகுதியாகும். வைபவ் பிரிவு , அபய் பிரிவு, அகின்சா பிரிவு, நியாய் பிரிவு, கியான் பிரிவு, நிட்டி பிரிவு மற்றும் சக்தி பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளாக இப்பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இங்கு உள்ளனர். தில்லி-மீரட் விரைவுச்சாலையில் இந்திராபுரம் அமைந்துள்ளது, [1] இப்பகுதி வசுந்தரா, பிரதாப் விகார், வைசாலி மற்றும் நொய்டா பிரிவு 62 & 63 ஆகிய முக்கிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
இந்திராபுரம் Indirapuram | |
---|---|
குடியிருப்பு அமைவிடம் | |
இந்திராபுரம் வானகத்தோற்றம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | காசியாபாத்து |
வைசாலி மற்றும் நொய்டா மின்னணு நகர் ஆகிய இரண்டு நீல வரிசை மெட்ரோ நிலையங்களிலிருந்து 5 கிமீ தொலைவில் இந்திராபுரம் உள்ளது.[2] [3] நொய்டா பகுதியிலிருந்து காசியாபாத்தில் உள்ள மோகன் நகர் வரையிலான நீல வரிசை விரிவாக்கம், இந்திராபுரம் வழியாக மெட்ரோ வலைப்பின்னலை மேலும் வலுப்படுத்தும்.
கல்வி மற்றும் சுகாதார மையங்கள் தொகு
இந்திராபுரம் டிபிஎசு புனித பிரான்சிசு பள்ளி, இந்திராபுரம் கேம்பிரிட்ச்சு பள்ளி , இந்திரபுரம் பொதுப்பள்ளி, செய்ப்பூர் மேலாண்மை நிறுவனம் மற்றும் இந்திராபுரம் உயர்கல்வி நிறுவனம் ஆகியவை இங்குள்ள முக்கிய கல்வி நிறுவனங்களாகும். 5 கி.மீ தொலைவுக்குள் சாந்தி கோபால் மருத்துவமனை, நொய்டா போர்ட்டிசு மருத்துவமனை, வைசாலி மேக்சு சிறப்பு தனிக்கூறு மருத்துவமனை , எல்.ஒய்.எப் மருத்துவமனை மற்றும் அமிகேர் மருத்துவமனை போன்ற சுகாதார வசதிகள் இப்பகுதிக்கு உள்ளன. [4]
மேற்கோள்கள் தொகு
- ↑ Service, Tribune News. "Go from Delhi to Meerut in 45 minutes as Expressway opens for public". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
- ↑ "With Blue line extension, Metro comes to Indirapuram doorstep". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
- ↑ Abhijay Jha (Aug 5, 2020). "Indirapuram-Noida footbridge link by November | Noida News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.
- ↑ "Schools in Indirapuram, Ghaziabad | Fees, Reviews, Admission, Results". Edustoke (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-02.