இந்திரா அனந்த் மேதியோ

இந்திய அரசியல்வாதி

இந்திரா அனந்த் மேதியோ (Indira Anant Maydeo) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக முதலாவது மக்களவையில் புனே மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

இந்திரா அனந்த் மேதியோ
Indira Anant Maydeo
முதலாவது மக்களவை உறுப்பினர்-புனே
பதவியில்
1951–1957
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்நாராயணன் கணேஷ் கோர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1903-09-07)7 செப்டம்பர் 1903
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1903ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்த மேதியோ பெர்க்குசன் கல்லூரியில் பயின்றார். இங்கிருந்து இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[1]

தொழில்

தொகு

மேதியோ இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். 1933-ல், இவர் அரிஜன் சேவா சங்கத்தின் மகாராட்டிரா பிரிவில் சேர்ந்தார்.[1] இவர் புனேவில் (அப்போது பம்பாய் மாநிலத்தில் ) கட்சியின் மிக முக்கியமான பெண் உறுப்பினராக இருந்தார். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றபோது, இந்தியத் தேசிய காங்கிரசு மேதியாவினை புனே தெற்கு மக்களவைத் தொகுதிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக்கியது. மேதியோ சுமார் 64% வாக்குகளைப் பெற்று சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் சிறீதர் லிமாயேவை தோற்கடித்து புனேவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3] இந்த சாதனையை இன்னும் வைத்திருக்கிறார்.[2] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், விவாகரத்து தொடர்பான மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தார். ஆனால் இந்த விவாதிக்கப்படாமலே இறுதியில் காலாவதியானது. மேதியோ 1952-ல் இந்தியாவின் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவரானார்.[1]

மண வாழ்க்கை

தொகு

இந்திரா 1927-ல் அனந்த் கோவிந்த் மேதியோவை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என நான்கு குழந்தைகள் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile: Maydeo, Shrimati Indira Anant". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  2. 2.0 2.1 "1951: When Pune elected a woman — Indirabai Maydeo — to first Lok Sabha". http://indianexpress.com/article/cities/pune/1951-when-pune-elected-a-woman-indirabai-maydeo-to-first-lok-sabha/. பார்த்த நாள்: 20 November 2017. 
  3. D.G., Supriya (16 January 2014). "Vinita Deshmukh: From Journalism to Politics". NRI Pulse. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_அனந்த்_மேதியோ&oldid=3743838" இலிருந்து மீள்விக்கப்பட்டது