இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை
இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை (Indira Gandhi Children's Hospital) என்பது ஆப்கானித்தானின் காபூலில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனையாகும்.[1] இந்த மருத்துவமனை 150 படுக்கைகளைக் கொண்டுள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் பெருமூளை வாதம் மையம் செயல்பட்டு வருகிறது.[2] இங்குச் செயல்படும் செயற்கை மூட்டு பொறுத்தும் மையத்தில் 1000 பேர் வரை ஜெய்ப்பூர் கால் மூலம் நிவாரணம் பெற்றுள்ளனர். இந்த மையம் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் திறக்கப்பட்டுள்ளது.[3]
இந்த மருத்துவமனையில் பணிபுரியும் சில இந்திய மருத்துவர்கள் பிப்ரவரி 2010-ல் தலிபான்களால் நடத்தப்பட்ட காபூல் தாக்குதலில் இறந்தனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Families find little comfort at Afghan children's hospital, CNN, 2009-03-19
- ↑ First cerebral palsy centre for Afghan children opens in Kabul, International Committee of the Red Cross, 2004-05-21
- ↑ A Ticket On The Caravan To Kabul, Outlook (magazine), 2002-01-28
- ↑ Guesthouses Used by Foreigners in Kabul Hit in Deadly Attacks, The New York Times, 2010-02-26