இந்துபாலா சுகாதியா
இந்திய அரசியலாளர்
இந்துபாலா சுகாதியா (Indubala Sukhadia) (2 ஜூலை 1921 – 8 மே 1999) என்பவர் ராஜஸ்தான் மாநில அரசியல்வாதி ஆவார். இவர் மறைந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் மோகன்லால் சுகாதியாவின் மனைவி ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் உதயப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1999 ஆம் வருடம் மே மாதம் 9 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இந்துபாலா சுகாதியாவின் இறுதிச்சடங்கில் அப்போதைய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.[2]