இந்துஸ்தான் கான்டெசா
மோட்டார் வாகனம் (மகிழுந்து)
ஹிந்துஸ்தான் கான்டெசா (Hindustan Contessa) என்பது இந்தியாவின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 1984 முதல் 2002 வரை தயாரிக்கப்பட்ட ஒரு மகிழுந்து ஆகும்.[1] இது 1976 முதல் 1978 வரை வாக்ஸால் விஎக்ஸ் மாடல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதன் வளர்ச்சியாக வாக்ஸால் விக்டர் எஃஇ மாடல் தயாரிக்கப்பட்டது. 1983 இல் இது அறிமுகப்படுத்தப்பட்டபோது சந்தையில் இருந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சில சொகுசு மாடல் மகிழுந்துகளில் இது ஒன்றாகும். அதன் சில உள்ளூர் போட்டி மகிழுந்துகளில் குறுகியகாலமே இருந்த ஸ்டாண்டர்டு 2000 , இது ரோவர் எஸ்டி1 மற்றும் பிரீமியர் 118 என்இ மகிழுந்து ஃபியட் 124 ஐ அடிப்படையாக கொண்டது. இது அரசு அதிகாரிகள் மத்தியில் மிகவும் பிரபலமான மகிழுந்தாக இருந்தது.
File: 1990களின் ஹிந்துஸ்தான் கான்டெசா டீசல் (உள்ளூரில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்ப்பர்கள் கொண்ட மாதிரி) | |
உற்பத்தியாளர் | இந்துஸ்தான் மோட்டர்ஸ் |
---|---|
உற்பத்தி | 1984–2002 |
வகுப்பு | சொகுசு மகிழுந்து |
உடல் வடிவம் | 4-கதவுகள் |
திட்ட அமைப்பு | FR layout |
இயந்திரம் | 1.5 L BMC B-Series OHV I4 1.8 L 4ZB1 I4 2.0 L 4FC1 diesel I4 2.0 L 4FC1-T turbodiesel I4 |
செலுத்தும் சாதனம் | 4-speed manual (BMC) 5-speed manual (Isuzu) |
சில்லு அடிப்பாகம் | 2,667 mm (105.0 அங்) |
நீளம் | 4,591 mm (180.7 அங்) |
அகலம் | 1,699 mm (66.9 அங்) |
உயரம் | 1,432 mm (56.4 அங்) |
குறட்டுக்கல் எடை | 1,200 kg (2,600 lb) |
Related | Vauxhall VX Series |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பிரபலமான கார்கள்". கட்டுரை. தி இந்து. 21 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2017.