இந்தோனேசியா மருத்துவமனை

இந்தோனேசியா மருத்துவமனை (அரபு மொழி: المستشفى الإندونيسي) என்பது காசாக்கரையிலுள்ள வடக்கு காசா ஆளுநரகத்தில் அடங்கும் பெயிட் லகியா எனும் நகரத்தில் அமைந்துள்ள மருத்துவமனையாகும். 2011 ஆம் ஆண்டில் காசா அரசாங்கம் 16,000 சதுர மீற்றர் இடத்தை நன்கொடையாக வழங்கிய பிறகு, மருத்துவமனையைக் கட்டும் பணி தொடங்கியது.[1][2] 126 பில்லியன் இந்தோனேசிய ரூபாய் செலவில் இந்த வளாகம் கட்டப்பட்டது. இந்தோனேசியாவில் வாழ்பவர்கள், இந்தோனேசிய செஞ்சிலுவைச் சங்கம், இந்தோனேசியாவில் இயங்கும் அரசு சார்பற்ற அமைப்பான முகமதியா சங்கம் ஆகியோர் வழங்கிய நன்கொடையின் மூலம் இந்நிதி திரட்டப்பட்டது.[3][4]

இந்தோனேசியா மருத்துவமனை

சனவரி 9, 2016 அன்று அப்போதைய இந்தோனேசிய குடியரசு துணைத் தலைவர் ஜுசுப் கல்லா இந்த மருத்துவனையின் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.[1] இந்த மருத்துவமனையில் 100 படுக்கைகளும், 4 அறுவைச் சிகிச்சை அறைகளும், 10 படுக்கைகளைக் கொண்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவும் உள்ளன. [2][5] மருத்துவமனையில் பணியாற்றும் சுமார் 400 பாலத்தீனியர்களுக்கு காசா சுகாதார அமைச்சகம் ஊதியமளிக்கிறது. இந்தோனேசியாவைச் சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த மருத்துவமனையில் பணியாற்றுகின்றனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Benamara, Nadia. "Indonesia Hospital saves lives in Gaza - OPEC Fund for International Development". The OPEC Fund for International Development (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
  2. 2.0 2.1 "Indonesia Hospital Opens in Gaza Strip". Hospimedica.com. 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
  3. "OPT: RI to build hospital in Gaza - occupied Palestinian territory | ReliefWeb". reliefweb.int (in ஆங்கிலம்). 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
  4. "Indonesia Hospital in Gaza denotes Indonesians solidarity with Palestinians: VP - Vice President of The Republic of Indonesia". www.wapresri.go.id (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-01-09. பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
  5. "Gaza Strip gets first new hospital in a decade, two more due this year" (in en). Reuters. 2016-01-06. https://www.reuters.com/article/palestinians-gaza-idUSL8N14O29L20160106.