இந்தோனேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அர்ங்காட்சியகம்

இந்தோனேசிய அருங்காட்சியகம் (Indonesia Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் தாமான் மினி இந்தோனேஷியா இந்தாக் (TMII) எனப்படுகின்ற அழகான இந்தோனேசிய சிறிய பூங்கா என்றவிடத்தில் அமைந்துள்ள ஒரு மானுடவியல் மற்றும் இனவியல் அருங்காட்சியகம் ஆகும்.[1] இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் வசிக்கும் பல்வேறு இனக்குழுக்களின் கலை மற்றும் கலாச்சாரங்களின் எச்சங்கள் இந்த அருங்காட்சியகம் அதிகமாகக் காணப்படுகின்றன. மற்றும் நவீன இந்தோனேசியாவை உருவாக்கக் காரணமான இந்தோனேசிய தீபகற்பத்தில் காணப்படுகின்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகம் பாலினீய கட்டிடக்கலையில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1,000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் சமகால இந்தோனேசிய கலைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய உடைகள் காட்சியில் உள்ளன.

இந்தோனேசிய அருங்காட்சியகம்
இந்தோனேசிய அருங்காட்சியக முதன்மைக் கட்டடம்
Map
நிறுவப்பட்டது1980
அமைவிடம்தமன் மினி இந்தோனேசியா இந்தா, ஜகார்த்தா, இந்தோனேசியா
வகைஇனவியல் மற்றும் மானுடவியல்
வலைத்தளம்Museum Indonesia

வரலாறு

தொகு

இந்த அருங்காட்சியகம் முழு தமன் மினி இந்தோனேசியா இந்தா (டிஎம்ஐஐ) எனப்படுகின்ற அழகான இந்தோனேசிய சிறிய பூங்கா வளாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தோனேசிய கலாச்சாரத்தின் கற்பதற்கான ஒரு மையமாக "ஒரே இடத்தில் இந்தோனேசியாவைப் பற்றி அறிந்துகொள்ளும் இடம்" என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. டி.எம்.ஐ.ஐ வளாகம் 1975 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, துவக்கி வைக்கப்பட்டது. இது டியென் சுஹார்டோவின் ஆதரவில் திறந்துவைக்கப்பட்டது . இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் 1976 ஆம் ஆண்டில் தொடங்கி 1980 ஏப்ரல் 20 ஆம் நாளான, டிஎம்ஐஐயின் 5 வது ஆண்டு விழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.[1][2]

இந்த அருங்காட்சியகத்தில் பாலினிய சிலைகள் மற்றும் ஆபரணங்கள் காணப்படுகின்றன. இது பாலினியகட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடமாகும். சில பெரிய அளவிலான பாதுராக்ஸா மற்றும் கேண்டி பெந்தர் (பிளவு போர்டல்) பாணியில் அமைந்த பாலினிய வாயில்கள், அத்துடன் பல மூலையில் கோபுரங்கள் போன்றவை அருங்காட்சியக வளாகத்தை அலங்கரிக்கின்றன. அருங்காட்சியக பூங்காவில் இந்துக் காவியமான இராமாயணம் கருப்பொருளாக அமைந்துள்ளது. முதன்மை கட்டிடத்திற்கு செல்வதற்கான பாலம் லங்காவுக்கு பாலத்தைக் கட்டிய வானரப் படைகள் மற்றும் நாக பாம்புகளின் வடிவத்தில் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகமானது பாலினிய கட்டிடக்கலைப் பாணியில் பாலினிய கட்டிடக் கலைஞர் ஐடா பாகஸ் துகூரால் கட்டப்பட்டது. முதன்மை கட்டிடம் பாலினிய தத்துவமான திரி ஹிதா கரணா அடிப்படையில் மூன்று தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இது மனிதனின் முழுமையான மகிழ்ச்சியின் மூன்று அம்சங்களை வலியுறுத்துகிறது; கடவுளோடும், சக மனிதர்களோடும், இயற்கையோடும் நல்லிணக்கமாக இருப்பதே அந்த தத்துவங்களாகும்.[1]

சேகரிப்புகள்

தொகு

நிரந்தரமாக கலைப்பொருள்களும் சேகரிப்புகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் மூன்று தளங்களில் மூன்று பிரிவுகளாக காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

முதல் தளம்

தொகு
 
பூர்வீக இந்தோனேசிய இனக்குழுக்களின் பாரம்பரிய திருமண உடை

முதல் தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்பொருள்களின் கருப்பொருள் பின்னேகா துங்கல் இக்கா (வேற்றுமையில் ஒற்றுமை) என்பதாகும். இது இந்தோனேசியாவின் 27 மாகாணங்களின் (1975 முதல் 2000 வரை இந்தோனேசிய மாகாணங்கள்) பாரம்பரிய முறையான உடை மற்றும் திருமண ஆடைகளைக் கொண்டுள்ளது.[1]

இரண்டாவது தளம்

தொகு

இரண்டாவது தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்பொருள்களின் கருப்பொருள் மனுசியா டான் லிங்க்குங்கன் (மனித மற்றும் சுற்றுச்சூழல்) என்பதாகும். அதாவது இயற்கையுடனும் சுற்றுச்சூழலுடனும் இந்தோனேசிய மக்களின் தொடர்புகளை வெளிப்படுத்துவதே இத் தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் நோக்கமாகும்.[1]

மூன்றாவது தளம்

தொகு
 
மூன்றாவது தளத்தில் முக்கியமான அம்சமாக அமைந்துள்ள 8 மீட்டர் உயரமுள்ள கற்பதரு வாழ்க்கை மரம்

மூன்றாவது தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப்பொருள்களின் கருப்பொருள் செனி டான் கிரியா (கலை மற்றும் கைவினைப்பொருட்கள்) என்பதாகும். இந்த அறை இந்தோனேசிய மக்களின் பாரம்பரிய மற்றும் சமகால கலை மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெபரா (மத்திய ஜாவா), பாலி, டோராஜா, மற்றும் அஸ்மத் கலாச்சாரத்தைச் சேர்ந்த பல சிக்கல்களைக் கொண்டு அமைந்த பாரம்பரிய மர செதுக்குதல் மரபுகள் இந்த தளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்தின் முக்கிய அம்சமாக 8 மீட்டர் உயரமும் நான்கு மீட்டர் அகலமும் உள்ள, மரத்தில் அமைந்த கற்பதரு மரத்தினைக் காணலாம். இந்த மரம் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் குறிக்கின்ற இந்த மரமானது காற்று, நீர், காற்று, பூமி மற்றும் நெருப்பு என்னும் பஞ்சபூத ஐந்து அடிப்படை கூறுகளைக் கொண்டுள்ளது; .[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Museum Indonesia: Taman Mini Indonesia Indah". www.tamanmini.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.
  2. "Terdapat Ribuan Koleksi Unik di Museum Indonesia". Republika Online. http://www.republika.co.id/berita/jurnalisme-warga/kabar/13/05/16/mmwez7-terdapat-ribuan-koleksi-unik-di-museum-indonesia.