இனங்குறித்தல்
இந்த கட்டுரைக்கு நிபுணரின் கவனம் தேவைப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு உரையாடல் பக்கத்தினை பார்க்க. இந்த வேண்டுகோளை அதற்குரிய விக்கிதிட்டத்துடன் தொடர்புபடுத்த உதவுங்கள். |
இந்தக் dateயில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். |
ஒருசொல், தன்பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். இனங்குறித்தல் என்பது வட மொழியில் உபலட்சணம் எனப்படுகிறது.
நன்னூல் நூற்பா
தொகுஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே. - நன்னூல், 359 ஒருமொழி = பெயர், வினை, இடை, யுரி என்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்று, ஒழி தன் இனம்கொளற்கு உரித்து = ஒழிந்து நின்ற தன்தன் இனங்களைக் கொண்டு முடிதற்கு உரித்தாகும்.
எடுத்துக்காட்டுகள்
தொகுஇத்தொடர், கதிர்வேல் வெற்றிலை மட்டுமா தின்றான். வெற்றிலையோடு அதற்கு இனமான பாக்கு, சுண்ணாம்பு முதலானவற்றையும் சேர்த்துத் தின்றான் எனப்பொருள்படும்.
இத்தொடர், இராமன் அரிசி சோற்றை மட்டுமா உண்டான். சோற்றோடு அதற்கு இனமான குழம்பு, இரசம், தயிர், அப்பளம் முதலானவற்றையும் சேர்த்து உண்டான் எனப் பொருள்படும்
ஆதாரம்.
தொகு- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பத்தாம் வகுப்பு பாடநூல் 80ம் பக்கம். முதற் பதிப்பு 2011. மறுபதிப்பு 2016.
- நன்னூல், 359 வது நூற்பா (பொது).
- தமிழ் இணையக் கல்விக் கழகம் - நன்னூல் உரை