இன்டன்பர்க் பேரிடர்
இன்டன்பர்க் பேரிடர் (Hindenburg disaster) எனும் இது, 1937 ஆம் ஆண்டு, மே 6 இல் நடந்த ஒரு வான்கப்பல் விபத்தாகும். "டொய்ச்ச செப்பெலின்-ரீடெரெய்1" (Deutsche Zeppelin-Reederei1) எனும் நிறுவன இயக்கத்தில் "இன்டன்பர்க் வகுப்பு வான்கப்பல்" (Hindenburg-class airship) வகையைச் சார்ந்த, "இன்டன்பர்க்" (Hindenburg) எனும் பெயருடைய (பதிவு எண்:D-LZ129) வான்கப்பல் ஒன்று, அமெரிக்காவின்வின் நியூ செர்சி மாநிலத்திலுள்ள மான்செசுடர்நகரியம் பகுதியில் அமைந்துள்ள "லேக்ஹர்ஸ்ட் கடற்படை விமான பொறியியல் நிலையம்" அருகே, கப்பற் பாய் மரம் உடனான செருமனி பயணிகள் "வான்கப்பல் LZ 129" வான்கப்பலை நங்கூரமிட முயன்ற போது தீ பிடித்து விபத்துக்குள்ளானதாக அறியப்பட்டது. இந்த வான்கப்பல் பயணத்தில், வானூர்தி சேவைப் பணியாளர்கள் 61 பேரும், பயணிகள் 36 பேரும், மொத்தம் 97 பேர்கள் செருமனியின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமான பிராங்க்ஃபுர்ட்லிருந்து அமெரிக்காவின்வின் நியூ செர்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இலக்கை அடைந்த நிலையில் நடந்த இவ்விபத்தில், 13 பயணிகளும், 22 பயணச் சேவைப் பணியாளர்களும், மற்றும் தரையில் ஒரு சேவைப் பணியாளரும் மொத்தம் 36 பேர்கள் கொல்லப்பட்டு, எஞ்சிய 62 பேர்கள் காயங்களோடு உயிர்தப்பினார்கள்.[1]
இன்டன்பர்க் தீ பிடித்த சில வினாடிகளின் பின்னர் விழத் தொடங்கும் காட்சி | |
நிகழ்வு சுருக்கம் | |
---|---|
நாள் | 1937, மே 6 |
சுருக்கம் | தீப்பிடித்த வான்கப்பல் |
இடம் | லேக்ஹர்ஸ்ட் கடற்படை விமான பொறியியல் நிலையம் அருகில் மான்செசுடர்நகரியம், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா |
பயணிகள் | 36 |
ஊழியர் | 61 |
காயமுற்றோர் | அறியப்படவில்லை |
உயிரிழப்புகள் | 36 (13 பயணிகள், 22 சேவைப் பணியாளர்கள், தரையில் ஒருவர்) |
தப்பியவர்கள் | 62 |
வானூர்தி வகை | இன்டன்பர்க் வகுப்பிலான வான்கப்பல் |
வானூர்தி பெயர் | இன்டன்பர்க் |
இயக்கம் | டொய்ச்ச செப்பெலின்-ரீடெரெய்1 |
வானூர்தி பதிவு | D-LZ129 |
பறப்பு புறப்பாடு | பிராங்க்ஃபுர்ட், செருமனி |
சேருமிடம் | கடற்படை விமானப் பொறியியல் நிலையம் லேக்கேர்சுடு, நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Hindenburg Disaster". www.airships.net. © 2009. பார்க்கப்பட்ட நாள் 2016-09-15.
{{cite web}}
: Check date values in:|date=
(help)