இன்னாலில்லாஃகி வ-இன்னா இலைஃகி ராச்சிவூன்
இன்னாலில்லாஃகி வ-இன்னா இலைஃகி ராசி3வூன் (ʾinnā li-llāhi wa-ʾinna ʾilayhi rājiʿūn, அரபு மொழி: إِنَّا لِلَّٰهِ وَإِنَّ إِلَيْهِ رَاجِعُونَ ) என்பது திருக்குரானில் வரும் ஒரு பகுதி. இதன் பொருள் இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம் என்பதாகும். யாரேனும் இறந்துவிட்டால் குர்ஆனின் இவ்வரிகளைக் கூறி ஆறுதல் சொல்லுதல் வழக்கம்.
விளக்கம்
தொகுசுருக்கமாகச் சொல் விளக்கம்[1] கீழே:
ʾஇன்னா: எனில் நாம் (நாம் யாவரும் என்னும்படி அழுத்தமாகக் கூறும் நாம்). இச்சொல் இன்னா-னா என்பதன் சுருங்கிய வடிவம்.
லி-ல்லாஃகி: "லி" என்பது வேற்றுமையுருபு போன்ற ஆனால் முன்னிற்கும் சொல் (ஃகார்ஃபு சா3ர் ḥarfu jarr). இதன் பொருள் அவரின், அவருடைய, அவருக்காக என்பதில் வரும் இன், உடைய போன்ற ஓர் உடைமைப்பொருள் உணர்த்தி முன்னிற்கும் வேற்றுமையுருபு. "அ லக்கா அக்குன் (A laka ʾakhun)" (இதில் "ல" என்பது "லி" என்பதுபோன்றதே) என்பதன் பொருள் "உங்களுக்கு உடன்பிறந்தவன் இருக்கின்றானா?" என்பது. எனவே லி-ல்லாஃகி என்பதன் பொருள் அல்லாஃகுக்கு (அல்லாஹ்ஹுக்கு)
வ: வ எனில் மற்றும் (-உம் என்னும் ஒன்றுக்கு மேற்பட்டுவருவனவற்றை உணர்த்து உம்மைப்பொருள்)
ʾஇன்னா: மேலே பார்க்கவும்.
இலை-ஃகி (இலைஹி): இருபகுதியாகப் பிரித்துப் பார்த்தால் இதன்பொருள் இறையை நோக்கி ("toward Him"). "ʾஇலை" என்பது "ʾஇலா" (ஒரு முன்னிற்கும் வேற்றுமையுருபு) போன்றது. இதன் பொருள் தமிழில் -கு போன்றது மசூதிக்குப் போனேன் என்பதில் வரும் -கு போன்றது ("தஹப்து இல மஸ்ஜிதின் (dhahabtu ʾila masjidin)". "ஃகி" என்பது உண்மையில் "ஃகு", இதன் பொருள் அவன் அவள் அது போன்றவற்றின் உடைமைப்பொருளுக்கு வரும் வேற்றுமையுருபு போன்றது (அவனுடைய, அவளுடைய அதனுடைய, அவனுக்கு, அவளுக்கு, அதுக்கு).
ராசி3 ஊன்: ராசா3 எனில் திரும்பு; ராசி3 என்பது திரும்பி வருபவர் என்பது போன்ற பொருள் தரும் பெயர்ச்சொல் அல்லது பெயரடை போன்ற வடிவம். ஊன் என்பது மூன்றும் அதற்கு மேலுமான பன்மை. எனவே ராசி3 ஊன் என்பதன் பொருள் திரும்பிவருபவர் அல்லது வீடு திரும்புவோர்என்பதாகும்.
எனவே இந்தக் குர்ஆன் வரிகள் (அல்லாஃகாகிய) இறைவனைச் சேர்ந்த நாம் இறைவனிடம் சேர்கின்றோம் என்னும் பொருள் தரும் மொழி.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Word-by-Word Quran - Verse (2:156)". Kais Dukes. பார்க்கப்பட்ட நாள் 30-04-2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)