இன்னா கோரன்
இன்னா கோரன் (Inna Koren ) அசர்பைசானில் பிறந்த அமெரிக்க சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 1964 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 ஆம் தேதியன்று பிறந்தார். 1986 ஆம் ஆண்டு அனைத்துலக பெண் சதுரங்க மாசுட்டர் பட்டம் வென்ற இவர் அமெரிக்க பெண்கள் சதுரங்க சாம்பியன் போட்டியையும் வென்றார்.
இன்னா கோரன் Inna Koren | |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பிறப்பு | 30 மார்ச்சு 1964 அசர்பைசான், பக்கூ |
பட்டம் | அனைத்துலக மெண்கள் சதுரங்க மாசுட்டர், (1986) |
வாழ்க்கை வரலாறு
தொகு1979 ஆம் ஆண்டிலிருந்து கோரன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். 1986 ஆம் ஆண்டில் இவர் அமெரிக்காவின் மகளிர் சதுரங்கப் போட்டியை வென்றார்[1]. இதே ஆண்டில் இவருக்கு பிடே அமைப்பு அனைத்துலக பெண் சதுரங்க மாசுட்டர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. 1987 ஆம் ஆண்டு செர்பியாவின் சிம்மேடிரிவ்சுகா பாலாங்கா நகரில் நடைபெற்ற அனைத்துலக மகளிர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் இவர் அங்கேரி நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை ஐடில்கோ மாதிலுடன் சேர்ந்து ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தைப் பிடித்தார்[2]. மகளிர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இன்னா கோரன் அமெரிக்காவுக்காக விளையாடினார்[3].
- 1984 ஆம் ஆண்டு கிரீசு நாட்டின் தெசலோனிகி நகரில் நடைபெற்ற 26 ஆவது மகளிர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இரண்டாவது பலகையில் விளையாடி (+3, = 2, -4) என்ற புள்ளிகள் பெற்றார்.
- 1988 ஆம் ஆண்டு அதே தெசலோனிகி நகரில் நடைபெற்ற 28 ஆவது மகளிர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் மூன்றாவது பலகையில் விளையாடி (+3, = 5, -2) புள்ளிகள் ஈட்டினார்.
இன்னா யேல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். யேல் நகரில் இருந்தபோது அங்கு நடைபெற்ற பான் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கிடையிலான அணி சதுரங்கப் போட்டியில் யேல் பல்கலைக்கழகத்தின் வெற்றி பெற்ற அணியில் ஒரு உறுப்பினராக கோரன் இருந்தார்[4] .
யேல் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டில் இப்பட்ட்த்தை வென்ற போது அவ்வணியில் யோயல் பெஞ்சமின், மைக்கேல் வால்டர், மற்றும் இன்னா கோரன் ஆகிய எதிர்கால அமெரிக்க சதுரங்க வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர். கோரன் தன்னுடைய வாழ்க்கைத் தொழிலாக நிதி நிறுவனமொன்றை தொடங்கி சில காலம் நடத்தினார். பின்னர் 11 ஆண்டுகள் புருடென்சியல் நிதிநிறுவனத்தில் முதுநிலை துணைத் தலைவராகப் பணிபுரிந்தார். 2001 முதல் 2003 வரை வாச்சோவியா செக்யூரிட்டீசு அமைப்பு நடத்திய ஒரு நுகர்வோர் ஆராய்ச்சியில் பங்கேற்றார். பின்னர் 2003 ஆம் ஆண்டில் ஒரு பகுப்பாளராக பணிபுரிந்தார்[5]..
மேற்கோள்கள்
தொகு- ↑ Mikolyzk, Thomas. "The United States Chess Federation - U.S. Women's Champions". main.uschess.org.
- ↑ "1987 Smederevska Palanka Interzonal Tournament : World Chess Championship (women)". www.mark-weeks.com.
- ↑ Bartelski, Wojciech. "OlimpBase :: Women's Chess Olympiads :: Bettina Trabert". www.olimpbase.org.
- ↑ "Pan_American_Intercollegiate_Team_Chess_Championship". en.wikipedia.org.
- ↑ "Inna Koren: Executive Profile & Biography". www.bloomberg.com.
புற இணைப்புகள்
தொகு- Inna Koren chess games at 365Chess.com