இன்னிசை அளபெடை

அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டுதல். இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனிமையாக இசைப்பதற்காக ஒத்த இசையெழுத்து கூட்டி எழுதப்படுவது.

செய்யுளிசை, சொல்லிசை அகிய இரு காரணங்களும் இல்லாமல் வெறுமனே இனிய இசைக்காக இது கூட்டி எழுதப்படும்.

காட்டு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. [1]

இந்தத் திருக்குறள்

கெடுப்பதும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதும் எல்லாம் மழை

என அமைந்திருப்பினும் வெண்டளை இலக்கணத்தில் பிழை நேராது. அப்படி இருக்கையில் அளபெடை கூட்டப்பட்டிருப்பது இன்னிசைக்காக என்பதை உணரலாம்.

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னிசை_அளபெடை&oldid=1562052" இலிருந்து மீள்விக்கப்பட்டது