இப்போ பே

இந்திய மின் வணிக கட்டண முறை மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனம்

இப்போ பே (IppoPay) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த யு.பி.ஐ செயலி ஆகும். இது 2020ல் உருவாக்கபட்டது. இதைக் கொண்டு செல்லிடத் தொலைபேசி வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இதை தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகன், ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் துவக்கினர். இந்த நிறுவனம் சென்னையைத் தளமாக கொண்டு இயங்குகிறது.[1] 2024, சனவரி காலகட்டத்தில் நாள்தோறும் இதன் வழியாக எட்டு கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடக்கிறது. முதலில் ஏழு பேர் மட்டுமே பணிபுரிந்த நிலையில் 2024 காலகட்டத்தில் இந்நிறுவனத்திலை 400 பேர் பணிபுரிகின்றனர்.[2]

இப்போ பே
வகைதனியார்
நிறுவியது2020
நிறுவனர்மோகன், ஜெயக்குமார்
தலைமையகம்சென்னை,தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுவதும்
இணையத்தளம்https://ippopay.com/
இணையத்தள வகைஇணைய-வணிகம்
தொடக்கம்2020

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத்தின் முதல் யூபிஐ.. சிரமங்கள், தடைகளை தாண்டி சாதித்த இப்போ பே!!". The Economic Times Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-10-25.
  2. "பிசினஸ் என்பது கடலுக்கு போகிற மாதிரி நிச்சயமின்மை நிரம்பிய பயணம்! - 'இப்போ பே' நிறுவனர் & சிஇஓ மோகன் பேட்டி". Hindu Tamil Thisai. 2024-01-29. பார்க்கப்பட்ட நாள் 2024-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்போ_பே&oldid=4126792" இலிருந்து மீள்விக்கப்பட்டது