இப்ராகிம் பூங்கா
இப்ராகிம் பூங்கா (Ibrahim Park) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருச்சிராப்பள்ளி நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் பயன்பாட்டிற்கான ஒரு பூங்காவாகும்.[1] 1928 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை திருச்சிராப்பள்ளி நகராட்சியின் தலைவராக பதவியிலிருந்த எம். கே. முகம்மது இப்ராகிம் ராவுத்தர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, தானமாகக் கொடுத்த இந்த இடத்தில் பூங்கா கட்டப்பட்டு, அவரது நினைவாக 'இப்ராகிம் பூங்கா' என, பெயர் சூட்டப்பட்டது.[2]
இப்ராகிம் பூங்கா Ibrahim Park | |
---|---|
வகை | நகரப் பூங்கா |
அமைவிடம் | மேலப்புலிவார் சாலை, தாராநல்லூர், திருச்சிராப்பள்ளி |
ஆள்கூறு | 10°49′13″N 78°41′37″E / 10.8202°N 78.6935°E |
மேலாண்மை | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
நிலை | பயன்பாட்டிலுள்ளது |
அமைவிடம்
தொகுதிருச்சிராப்பள்ளியில் (10°49′13″N 78°41′37″E / 10.8202°N 78.6935°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இப்பூங்கா உருப்பெற்றுள்ளது. வணிகம் சார்ந்த சூழல் மிகுந்த மேலப்புலிவார் சாலையில் பூங்கா அமைந்துள்ளது.[3]
நிருவாகம்
தொகுதிருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் பூங்கா நிருவகிக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sumathikamalam, Dr S. (2021-01-07), TIRUCHIRAPALLI CITY ADMINISTRATION (1950 – 1980) A STUDY (in ஆங்கிலம்), Lulu Publication, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-716-26877-9, பார்க்கப்பட்ட நாள் 2024-04-25
- ↑ எம்.திலீபன், வெ.கௌசல்யா (2021-10-31). "திருச்சி ஊர்ப்பெருமை: நகரின் நடுவே அழகிய சூழலும் அமைதியும் - நடைப்பயிற்சிக்கு ஏற்ற இப்ராஹிம் பூங்கா!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.
- ↑ Ancy Donal Madonna (2023-01-30). "Ibrahim Park in Tiruchi has fallen into disrepair". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.
- ↑ "திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட் இப்ராஹிம் பூங்கா..." News18 தமிழ். 2022-09-27. பார்க்கப்பட்ட நாள் 2024-04-25.