இப்ராஹிம் கலீல் எல்லை

ஈராக்கில் உள்ள இடம்

இப்ராஹிம் கலீல் (அரபு: ابراهيم خليل) என்பது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான எல்லையைக் கடக்கும் பாதை உள்ள இடமாகும். இது ஆங்கிலத்தில் ஹபூர் பார்டர் அல்லது ஃபிரண்டியர் கேட் என்றும் அழைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு எல்லைக் கோடு மற்றும் வாயிலுக்கு முன் கபூர் ஆற்றைக் கடக்கும் ஒரு பாலம் உள்ளது. இது ஈராக்கிற்கும் துருக்கிக்கும் இடையிலான இயற்கை எல்லையையாக உள்ளது.[1] சிலோபி நகரின் தெற்கே இந்த எல்லைப் பாதை அமைந்துள்ளது.

இப்ராஹிம் கலீல்
ابراهيم خليل
ஈராக்கில் இப்ராஹிம் கலீல் எல்லையின் முன் வாயில்
ஈராக்கில் இப்ராஹிம் கலீல் எல்லையின் முன் வாயில்
இப்ராஹிம் கலீல் is located in ஈராக்
இப்ராஹிம் கலீல்
இப்ராஹிம் கலீல்
ஈராக்கில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°08′41.00″N 42°33′56″E / 37.1447222°N 42.56556°E / 37.1447222; 42.56556
நாடு  துருக்கி ஈராக்

இது துருக்கியில் இருந்து ஈராக்கிற்குள் நுழைவதற்கான இடமாக இருந்தாலும், குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதி அரசாங்கத்தால் இந்த எல்லைப் பகுதி கட்டுப்படுத்தப்படுகிறது. இங்கு சிவப்பு, வெள்ளை, பச்சை என மூவண்ணக் கொடியின் மையத்தின் பொன்நிற கதிரவனைக் கொண்ட குர்திஸ்தான் கொடியின் கீழ் குர்திஷ் பெசுமெர்கா போராளிகளால் நிர்வகிக்கப்படும் சோதனைச் சாவடி செயல்படுகிறது. இங்கு அது தன் சொந்த சுங்க, குடிவரவு கொள்கைகளை அமல்படுத்துகிறது. 20004 செப்டம்பரில், அமெரிக்காவின் 167 வது கார்ப்ஸ் ஆதரவு குழு, நியூ ஹாம்சயர் இராணுவ ரிசர்வ் பிரிவு, இப்ராஹிம் கலீலுக்கு வடக்கு துருக்கியின் விநியோக மையங்களிலிருந்து ஈராக்கில் கூட்டணிப் படைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிக்க அனுப்பப்பட்டது. [2]

2015 திசம்பர் 6 அன்று எல்லை வழியாக  3,000 [3] துருக்கிய வீரர்கள், மொசூல் கிராமப்புறங்களுக்கு சென்றனர்.

படக் காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்ராஹிம்_கலீல்_எல்லை&oldid=3315902" இலிருந்து மீள்விக்கப்பட்டது