இமர்தி தேவி

இந்திய அரசியல்வாதி

இமார்தி தேவி (Imarti Devi)(பிறப்பு 14 ஏப்ரல் 1975) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் மத்தியப் பிரதேச அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார். முதலில் கமல்நாத்தின் காங்கிரசு அரசாங்கத்தில் திசம்பர் 2018 முதல் மார்ச் 2020 வரையிலும், பின்னர் சிவராஜ் சவுகானின் பாஜக அரசாங்கத்தின் கீழ் சூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலும் அமைச்சராகப் பதவி வகித்தார். [1] இமார்தி தேவி 2020 மத்தியப் பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் சுரேஷ் ராஜேவை எதிர்த்து தப்ராவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

இமார்தி தேவி 1997-ல் குவாலியர் மாவட்ட இளைஞர் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

2004-2009 காலகட்டத்தில் குவாலியர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், 2005 முதல் வட்டார காங்கிரசு தலைவராகவும் இருந்தார். 2008ஆம் ஆண்டு முதல் முறையாக மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திசம்பர் 2018-ல், இமார்தி தேவி மத்தியப் பிரதேசத்தின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் என கமல்நாத் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். 2020 மத்தியப் பிரதேச அரசியல் நெருக்கடியின் போது, இவர் மூத்த காங்கிரசு தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவை ஆதரித்தார். இச்சூழலில் பதவி விலகிய 22 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[3][4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இமார்தி தேவி பூரன் சிங் சுமன் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகள் உள்ளார்.[5]

சட்ட விவகாரங்கள் தொகு

நவம்பர் 2016-ல், குவாலியர் குற்றவியல் நீதிமன்றம் இமார்தி தேவி வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், இவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. பின்னர் இமார்தி தேவி உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை பெற்றார். வழக்கின் இறுதியில் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Rahul Noronha (December 29, 2018). "Madhya Pradesh ministers get portfolios, Bala Bachchan gets home, Bhanot finance". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 August 2019.
  2. "Madhya Pradesh: Imarti Devi among 3 ministers to lose | Bhopal News – Times of India". The Times of India (in ஆங்கிலம்). 11 Nov 2020. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
  3. "Jyotiraditya Scindia resigns from Congress, more than 20 party MLAs quit". 10 March 2020. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jyotiraditya-scindia-resigns-from-congress/articleshow/74561583.cms. 
  4. "22 rebel Cong MLAs, whose resignation led to fall of Kamal Nath govt, join BJP". https://www.livemint.com/politics/news/22-rebel-cong-mlas-whose-resignation-led-to-fall-of-kamal-nath-govt-join-bjp-11584797981690.html. 
  5. "In Midst of Fresh Row, Imarti Devi Was Once a Farm Labourer Who Moved Up the Ranks with Scindia". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 October 2020.
  6. Staff Reporter (24 November 2016). "Bhopal: Gwalior session court orders to book Congress MLA Imarti Devi" (in English). Bhopal: The Free Press Journal இம் மூலத்தில் இருந்து 23 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180723051025/http://www.freepressjournal.in/bhopal/bhopal-gwalior-session-court-orders-to-book-congress-mla-imarti-devi/976980. பார்த்த நாள்: 23 July 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமர்தி_தேவி&oldid=3681801" இலிருந்து மீள்விக்கப்பட்டது