இமாம் இப்னு மாஜா

அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா ("Abū ʻAbdillāh Muḥammad ibn Yazīd Ibn Mājahj" அரபு மொழி: ابو عبد الله محمد بن يزيد بن ماجه الربعي القزويني‎) பொதுவாக இமாம் இப்னு மாஜா என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார்.[1]. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த இப்னு மாஜா மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது.[2].

அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா
ابو عبد محمد بن يزيد بن ماجه الربعي القزويني
பட்டம்இமாம் இப்னு மாஜா
பிறப்புஇ.நா 209 ( கி.பி. 824)
கஸ்வீன், பாரசீகம்
(இன்றைய இரான்)
இறப்புஇ.நா 273 ( கி.பி. 887
சமாதிகஸ்வீன்
காலம்அப்பாசிய கலிபாக்கள்
பிராந்தியம்இசுலாம்
பணிஇஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர்
சட்டநெறிஷாபி
முதன்மை ஆர்வம்ஹதீஸ்
ஆக்கங்கள்இப்னு மாஜா (நூல்)
செல்வாக்கு செலுத்தியோர்
  • சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

பிறப்பு

தொகு
 
கஸ்வீன்,பாரசீகம்
(இன்றைய இரான்)

இமாம் இப்னு மாஜா, இ.நா 209 ( கி.பி. 824)ல் பாரசீக குடும்பத்தில் (இன்றைய இரான் நாட்டில்) உள்ள கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார். [3][4].இவரது இயற்பெயர் முஹம்மத் பின் யஸீத் என்பதாகும்.இவரது தந்தை பெயர் யஸீத். இவர் ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.

ஹதீஸ் தொகுப்பு

தொகு

இமாம் இப்னு மாஜா,அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள்.பின்னர் ஹதீஸ்கள் சேகரிக்க குராசான், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம் தற்போதைய ஈராக் , சிரியா மற்றும் எகிப்து உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார்.

இவரது ஹதீஸ் சேகரிப்பான இப்னு மாஜா நூல் 4,000 ஹதீஸ்கள் 1,500 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இப்னு மாஜா தொகுப்பு இது 32 புத்தகங்களாக தொகுக்கப் பட்டுள்ளது.[3].[4].

இவரது ஆசிரியர்கள்

தொகு

அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.

இவரது மாணவர்கள்

தொகு

அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

நூல்கள்

தொகு
  1. இப்னு மாஜா (நூல்)
  2. அத்தாரீஹ்
  3. அல் தஃப்சீர் [3]

இறப்பு

தொகு

இமாம் இப்னு மாஜா,அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரிலேயே ரமலான் மாதம் இ.நா 273 ( பிப்ரவரி 19ல் கி.பி. 887 )ல் இறந்தார்.அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Abdul Mawjood, Salahuddin `Ali (2007). The Biography of Imam Muslim bin al-Hajjaj. translated by Abu Bakr Ibn Nasir. Riyadh: Darussalam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9960988198.
  2. Various Issues About Hadiths
  3. 3.0 3.1 3.2 al-Dhahabi, Muhammad ibn Ahmad (1957). al-Mu`allimi (ed.). Tadhkirat al-Huffaz (in Arabic). Vol. 2. Hyderabad: Da`irat al-Ma`arif al-`Uthmaniyyah. p. 636.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 Ludwig W. Adamec (2009), Historical Dictionary of Islam, p.139. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810861615.
  5. al-Kattani, Muhammah ibn Ja`far (2007). Muhammad ibn Muhammad al-Kattani (ed.). al-Risalah al-Mustatrafah (in Arabic) (seventh ed.). Beirut: Dar al-Bashair al-Islamiyyah. p. 12.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்_இப்னு_மாஜா&oldid=2716877" இலிருந்து மீள்விக்கப்பட்டது