இமிடசோலேட்டு
இமிடசோலேட்டு (Imidazolate) என்பது (C3H3N−2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இமிடசோலின் இணை காரமாகும். கருக்கவரியான இது ஒரு வலிமையான காரமுமாகும். தனி எதிர்மின் அயனியானது C2v சீரொழுங்குடன் காணப்படுகிறது. இமிடசோலின் அமிலத்தன்மையின் pKa மதிப்பு 14.05 ஆகும்[1]. எனவே இமிடசோலில் (C3H3N2H) இருந்து புரோட்டானை நீக்க ஒரு வலிமையான காரம் தேவைப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இமிடசோலேட்டு
| |
வேறு பெயர்கள்
இமிடசோலைடு
| |
இனங்காட்டிகள் | |
36954-03-7 | |
ChemSpider | 2631931 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C3H3N2 | |
வாய்ப்பாட்டு எடை | 67.070 |
காடித்தன்மை எண் (pKa) | 14.05[1] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
67.8 கியூ•மோல்−1 (16.2 kcal•mol−1) Gas phase.[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோற்றம்
தொகுஒருங்கிணைவு வேதியியலில் இமிடசோலேட்டு பொதுவாக ஒரு இணைப்பு ஈந்தணைவியாகக் கருதப்படுகிறது. சியோலிட்டிக் வகை இமிடசோலேட்டு கட்டமைப்பில் உலோகங்கள் இமிடசோலேட்டுகள் மூலமே ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன[3][4]. சூப்பராக்சைடு டிசுமியூட்டேசு என்ற நொதியில் இமிடசோலேட்டு தாமிரம் மற்றும் துத்தநாக மையங்களை இணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 WALBA, HAROLD; ISENSEE, ROBERT W. (August 1961). "Acidity Constants of Some Arylimidazoles and Their Cations". The Journal of Organic Chemistry 26 (8): 2789–2791. doi:10.1021/jo01066a039.
- ↑ Gutowski, Keith E.; Rogers, Robin D.; Dixon, David A. (May 2007). "Accurate Thermochemical Properties for Energetic Materials Applications. II. Heats of Formation of Imidazolium-, 1,2,4-Triazolium-, and Tetrazolium-Based Energetic Salts from Isodesmic and Lattice Energy Calculations". The Journal of Physical Chemistry B 111 (18): 4788–4800. doi:10.1021/jp066420d.
- ↑ Phan, A.; Doonan, C. J.; Uribe-Romo, F. J.; Knobler, C. B.; O'Keeffe, M.; Yaghi, O. M. "Synthesis, Structure, and Carbon Dioxide Capture Properties of Zeolitic Imidazolate Frameworks" Acc. Chem. Res. 2010, 43, 58-67. எஆசு:10.1021/ar900116g
- ↑ Zhang, J.-P.; Zhang, Y.-B.; Lin, J.-B.; Chen, X.-M., "Metal Azolate Frameworks: From Crystal Engineering to Functional Materials", Chem. Rev. 2012, vol. 112, pp. 1001-1033. எஆசு:10.1021/cr200139g
- ↑ Protein Data Bank: 3CQQ; "Structures of the G85R variant of SOD1 in familial amyotrophic lateral sclerosis". J. Biol. Chem. 283 (23): 16169–77. June 2008. doi:10.1074/jbc.M801522200. பப்மெட்:18378676.