இம்சை அரசன் 24ம் புலிகேசி
இம்சை அரசன் 24ம் புலிகேசி (Imsai Arasan 24th Pulikecei) என்பது சிம்புதேவன் எழுதி இயக்கும் ஒரு தமிழ் வரலாற்று-நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006) திரைப்படத்தின் தொடர்ச்சியே இது. முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகை பார்வதி ஓமனக்குட்டன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் ஆகியவை இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றன.இந்த திரைப்படத்தின் முதல் தோற்றம் 23 ஆகஸ்ட் 2017 அன்று வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள் மற்றும் நடிகைகள்
தொகு- வைகை புயல் வடிவேலு
- பார்வதி ஓமனக்குட்டன்
- மனோபாலா
- இளவரசு
தயாரிப்பு
தொகுஇப்படத்தை தயாரிப்பாளர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் ஆகியவை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் முகமது ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் மற்றும் ஒளிப்பதிவாளர் சரவணன் ஆகியோர் இப்படக்குழுவில் உள்ளனர்.[2] வடிவேலுவை நாயகனாக இயக்குனர் ஷங்கர், தனது தயாரிப்பில் வெளிவந்த படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியில் அறிமுகப்படுத்தினார். சிம்பு தேவன் இயக்கிய இந்த அரசியல் நையாண்டிப் படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு, இயக்குனர் ஷங்கர், வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி எனும் படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். எனினும் வடிவேலுவிற்கும் படக்குழுவிற்கும் தொடர்ச்சியாக சண்டை நிலவியது. இப்பிரச்சனையைத் தீர்க்க தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நாடினார் ஷங்கர். தயாரிப்பாளர் சங்கம் இப்பிரச்சனையால் வடிவேலுவை வைத்து படம் எடுக்கத் தடை விதித்தது.[3]