இம்சோனைட்டு
இம்சோனைட்டு (Impsonitee) என்பது 50-85% கார்பன் உள்ளடக்கமும் 1.10-1.25 ஒப்படர்த்தி அளவும் கொண்ட கருப்பு நிறத்திலுள்ள கரிமத் தன்மையுள்ள ஒரு கனிமமாகும். அசுபால்டிக்கு பைரோபிட்டுமன் திண்மம் என்று இக்கனிமம் விவரிக்கப்படுகிறது. பாய்மபிட்டுமன்னிலிருந்து இது வழிப்பெறுதியாகப் பெறப்படுவதாகவும் நம்பப்படுகிறது. 1901 ஆம் ஆண்டில் சியார்ச்சு ஓமன்சு எல்ட்ரிட்ச்சு என்பவரால் இந்த சொல் உருவாக்கப்பட்டது. இது தென்கிழக்கு ஓக்லகோமாவில் உள்ள இம்ப்சன் பள்ளத்தாக்கில் உள்ள அசுபால்ட்டு என்ற பொருளைக் குறிக்கிறது. பின்னர் இதன் இருப்பிடம் இயம்போ சுரங்கம் என்று அறியப்பட்டது. இம்ப்சன் பள்ளத்தாக்கில் உள்ள நிலக்கீல் பொருள் பின்னர் கிரகாமைட்டு என மறுவகைப்படுத்தப்பட்டது. மேற்கு வர்ச்சீனியாவில் கிடைத்த கிரகாமைட்டுடன் கரைதிறனும் இரசாயன ஒற்றுமையும் அடிப்படையில் ஒத்ததாக உள்ளது.[1]