கிரகாமைட்டு
கிரகாமைட்டு (Grahamite) என்பது ஒரு கரிமக் கனிமமாகும். பைரோபிட்டுமென் அல்லது ஆந்த்ராக்சோலைட்டு [1]என்ற பெயர்களாலும் கிரகாமைட்டு கனிமம் அறியப்படுகிறது. கிரகாமைட்டு என்பது கரிக்கீல் செறிவூட்டப்பட்ட பாறை (அசுபால்டைட்டு) ஆகும். இயற்கையாகத் தோன்றும் திண்ம ஐதரோகார்பன் அசுபால்டைட்டு பாறை என்றும் அறியப்படுகிறது. ஒப்பீட்டளவில் இதனுடைய அதிக நிலைப்புத்தன்மை கார்பன் வீதம் 35-55% ஆகும். இக்கனிமம் உயர் வெப்பநிலை இணைவும் கொண்டுள்ளது.[3] கியூபா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ச்சினியா மற்றும் ஓக்லகோமா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஓக்லகோமாவின் இம்ப்சன் பள்ளத்தாக்கில் காணப்படும் கிரகாமைட்டு கனிமம் இம்சோனைட்டு என்று அழைக்கப்படுகிறது.
கிரகாமைட்டு Grahamite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கரிமக் கனிமம் |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக அமைப்பு | சீருறாத் திண்மம் |
மேற்கோள்கள் | [1][2] |
அமெரிக்காவின் மேற்கு வர்ச்சினியாவில் கிரகாமைட்டு கனிமத்தின் வணிக வளர்ச்சியில் ஆர்வமாக இருந்த இயேம்சு லோரிமர் கிரகாமின் நினைவாக என்றி வூர்ட்சு என்பவரால் கனிமத்திற்கு கிரகாமைட்டு எனப் பெயரிடப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mindat with location data
- ↑ Mineralienatlas
- ↑ Speight, James G. (2014). The Chemistry and Technology of Petroleum (5 ed.). CRC Press. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439873892.
- ↑ Richardson, Clifford (1910). "Grahamite, a solid native bitumen". Journal of the American Chemical Society 32 (9): 1032–1049. doi:10.1021/ja01927a003. https://zenodo.org/record/1428846/files/article.pdf.