இம்பால் நதி

இம்பால் நதி (Imphal River) வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் ஓடும் பிரதானமான நதியாகும். சேனாபதி மாவட்டத்திலுள்ள கரோங் என்ற மலையில் இம்பால் நதி தோன்றுகிறது. மணிப்பூர் நதியின் துணை ஆறான இது தவ்பல் மாவட்டத்தில் மணிபூர் ஆற்றுடன் இணைகிறது [1]. லோக்டாக் ஏரி மற்றும் இம்பால் நகரத்தையும் கடந்து இந்நதி தெற்கில் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லிலாங் ஆற்றுடன் இணைகிறது [2][3]. மணிப்புரா நதி என்ற பெயரில் இது பர்மாவில் பாய்ந்து இறுதியாக இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. இதனால் இம்பால் நகரம் இந்தியப் பெருங்கடலுடன் இணைப்பைப் பெறுகிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சப்பானிய போர் வீரர்கள் படகு மூலமாக இம்பால் நதியைப் பயன்படுத்தியே இம்பால் நகரத்திற்குள் நுழைந்தார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sen, Sipra (August 1992). Tribes and castes of Manipur: description and select bibliography. Mittal Publications. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-310-0. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
  2. Sengupta, Sutapa (1 January 2006). Rivers and riverine landscape in North East India. Concept Publishing Company. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-276-5. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
  3. Sharma, S. C.; Chaturvedi, Rachna B. (1990). Utilisation of wastelands for sustainable development in India: proceedings of the National Seminar on Utilisation of Wastelands for Sustainable Development in India, Balrampur, 1987. M.L.K. (P.G.) College, Balrampur Pub. Co. p. 362. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-279-8. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பால்_நதி&oldid=2383263" இலிருந்து மீள்விக்கப்பட்டது