இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்)
இயல்புப் புணர்ச்சி என்பது சொற்களோ அல்லது சொல்லின் உறுப்புகளோ எவ்வித மாற்றமும் இல்லாமல் இயல்பாக வரும் சொற் புணர்ச்சி வகை ஆகும்.[1]
எடுத்துக்காட்டு
தொகு- மண் + வெட்டி = மண்வெட்டி
- எமது + நாடு = எமதுநாடு
ஆகவே நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது அவற்றின் வடிவங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.
நிலைமொழி | வருமொழி | புணர்ந்தசொல் |
---|---|---|
கடல் | அழகு | கடலழகு |
அவர் | ஆல் | அவரால் |
மாணவர் | அணி | மாணவரணி |
இங்கு வரும் ல், ர் என்பன நிலை மொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்துக்களாகும். அ, ஆ வருமொழியில் முதல் எழுத்துகளாகும். இங்கு மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய் ஆகியுள்ளன. இதுவும் இயல்புப் புணர்ச்சியேயாகும்.
ல் + அ = ல
ர் + அ = ர
ர் + ஆ = ரா
மெய்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது தொல்காப்பியம். எனவே இங்கு மெய் எழுத்துகளோடு உயிரெழுத்து இயல்பாக இணைந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் மொழியும் இலக்கியமும், தரம் 8, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்கம் 96