இயேசுவின் வரலாற்றுத்தன்மை
இயேசுவின் வரலாற்றுத்தன்மை என்பது இயேசு கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆவணங்களை மையப்படுத்தி தெளிவு பெறுகிறது. இயேசு உலக வரலாற்றில் வாழ்ந்த உண்மையான நபர் என்பதற்கும், அவரது வாழ்வுக்கும், சிலுவை மரணத்திற்கும், உயிர்ப்புக்கும் பின்வரும் ஆவணங்கள் சான்று பகர்கின்றன.[1]
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் பெயர் மரியா. வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்' என்றார்." - லூக்கா 1:26,27,35.
"இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்." - மத்தேயு 1:18.
"அவர்கள் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தபோது, தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்." - லூக்கா 2:6,7,21.
"இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்." - லூக்கா 2:42-43,46,52.
"அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்." - மாற்கு 1:9.
"இயேசு கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்." - மத்தேயு 4:23.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்." - யோவான் 3:16-17.
"இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்." - மாற்கு 3:13-15.
"குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து, 'சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று சீடர்களிடம் கூறினார்." - லூக்கா 18:15-17.
"விண்ணரசு பற்றிய செய்திகளையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை." - மத்தேயு 13:34
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்." - யோவான் 6:52,55-56.
"அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, 'இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்' என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்' என்றார்." - மத்தேயு 26:26-28.
"பிலாத்து யூதர்களிடம், 'இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை' என்றான். யூதர்கள் அவரைப் பார்த்து, 'எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்' என்றனர்." - யோவான் 19:6-7.
"அப்போது பிலாத்து பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்." - மத்தேயு 27:26.
"அவர்கள் 'மண்டைஓட்டு இடம்' எனப்பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்; அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்." - மாற்கு 15:22,24.
"யோசேப்பு பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார்." - லூக்கா 23:52-53.
"அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, 'நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்' என்றார்." - மத்தேயு 28:5-6.
"பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார்." - மாற்கு 16:14.
"இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்." - லூக்கா 24:51.
திருமுகங்களில்
தொகுதலைமை திருத்தூதர் பேதுரு
தொகு"உங்களுக்கென்றிருந்த அருளைப் பற்றிதான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; (இயேசு கிறிஸ்துவின் வழியாக கிடைத்த) இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர்." - 1 பேதுரு 1:10.
"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்." - 2 பேதுரு 1:16-18.
பிறஇனத்தாரின் திருத்தூதர் பவுல்
தொகு"நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படி யானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப் படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ!" - உரோமையர் 1:2-4, 5:8,10.
"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல் லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப் பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்." - 1 கொரிந்தியர் 1:18,23-24.
அன்பு திருத்தூதர் யோவான்
தொகு"தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்: கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம். வெளிப் படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த நிலை வாழ்வு பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக் குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடவுள் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்." - 1 யோவான் 1:1-3,7.
மறைவு நூல்களில்
தொகுவாலன்ட்டினஸ் எழுதிய உண்மையின் நற்செய்தி (கி.பி.135-160)
தொகு"கடவுளின் மகன் உடலெடுத்து வந்தார்; மேலும் 'வார்த்தை நம்மிடையே வந்து மனிதரானார்.' அவர் மனித உருவில் தோன்றினார். அவர்கள் அவரைக் கண்டு, அவரது வார்த்தைகளைக் கேட்டபோது, அன்பு மகனாகிய அவர், அவர்கள் தன்னை சுவைக்கவும், முகரவும், தொடவும் அனுமதித்தார். அவர் தோன்றியபோது, அவர்களுக்கு தந்தையைப் பற்றி அறிவித்தார்."
"தனது மரணம் பலருக்கு வாழ்வளிக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்ததால், இயேசு துன்பங்களை ஏற்றுக்கொள்வதில் பொறுமையாக இருந்தார். அவர் (சிலுவை) மரத்தில் அறையப்பட்டார்; சிலுவையில் தந்தையின் சாசனத்தை வெளியிட்டார். வாழ்வின் வழியாக தன்னையே தாழ்த்தி சாவுக்கு கையளித்தார். அழியக்கூடிய ஆடைகளை தன்னிடமிருந்து களைந்து, அவரிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத அழிவில்லாதவற்றை அணிந்துகொண்டார்; முடிவின்மை அவரை உடுத்தியது."
ரெஜினோசுக்கு எழுதப்பட்ட உயிர்ப்பின் மீதான விவாதம் (கி.பி.2ஆம் நூற்றாண்டு)
தொகு"உடலெடுத்து வந்த ஆண்டவர், தன்னை கடவுளின் மகனாக வெளிப்படுத்தினார். இப்பொழுது இறைமகன் மானிடமகன் ஆகியுள்ளார். மனிதத்தன்மையிலும் இறைத் தன்மையிலும் அவர் அவர்களைத் தழுவினார். ஒரு பக்கம் இறைமகனாக அவர் மரணத்தை வெற்றிகொள்ள வேண்டும், மறு பக்கம் மானிடமகனாக ஆன்மீக உலகைப் புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் இந்த பிரபஞ்சம் வடிவம் பெறும் முன்பே இருந்த அவர், உண்மையின் வித்தாக மேலிருந்து வந்தவர்."
"மானிடமகனை நாம் அறிந்திருப்பதால், அவர் இறந்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்ததை நாம் நம்புகிறோம். 'அவர்கள் நம்பிக்கை கொண்ட சிறந்தவராகிய அவர் சாவுக்கு அழிவானார்' என்று நாம் கூறுகிறோம். நம்புவோர் பேறுபெற்றோர். மீட்பர் சாவை விழுங்கிவிட்டார். அவர் தன்னையே அழிவற்ற யுகமாக உருமாற்றி, தன்னை மேலே உயர்த்தி, காணக்கூடியவற்றை காணமுடியாதவற்றால் மூடி விட்டார்; மேலும், நமக்கு முடிவற்ற வாழ்வை வழங்கினார்."
"உயிர்ப்பை ஒரு மாயத்தோற்றம் என்று நினைக்கவேண்டாம், மாறாக அது உண்மை. உலகின் மாயத்தோற்றத்தைவிட நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு உண்மையானது என உறுதியாக கூறலாம்."
பழங்கால கிறிஸ்தவ பதிவுகளில்
தொகுதிருத்தந்தை கிளமென்ட் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம் (கி.பி.95)
தொகு"ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் இருந்து திருத்தூதர்கள் நற்செய்தியை நமக்காக பெற்றுக்கொண்டார்கள்; இயேசு கிறிஸ்து கடவுளால் அனுப்பப்பட்டவர். இரண்டும் இறைத் திருவுளத்தின் நியமன வரிசைப்படி வந்தன. எனவே அவர்கள் பொறுப்பை பெற்றுக்கொண்டு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் நிலைத்திருந்து, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் கடவுளின் வார்த்தையில் உறுதிபடுத்தப்பட்டு, இறையரசின் வருகைக்காக மகிழ்ச்சி அலைகளோடு புறப்பட்டு சென்றார்கள்; நாடுகளிலும் நகரங்களிலும் போதித்து, ஆவியால் நிரூபிக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய முதற்கனியானவர்களை ஆயர்களாகவும் திருத்தொண்டர்களாகவும் நியமித்தார்கள்."
அந்தியோக் ஆயர் இக்னேசியஸ் ட்ராலியருக்கு எழுதிய கடிதம் (கி.பி.110-115)
தொகு"தாவீது குலத்தவராகவும் மரியாவின் மகனாகவும் உண்மையிலேயே பிறந்து, உண்டு, குடித்த இயேசு கிறிஸ்து, போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில் உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டு, விண்ணுலகோர், மண்ணுலகோர், கீழுலகோர் கண்கள் முன்பாக இறந்தார்; மேலும் உண்மையிலேயே இறந்தோரிடம் இருந்து உயித்தெழுந்தார். அவரது தந்தை அவரை உயிரோடு எழுப்பினார்; அவ்வாறே, அவரில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் உயிரோடு எழுப்பப்படுவர்."
அந்தியோக் ஆயர் இக்னேசியஸ் ஸ்மைர்னியருக்கு எழுதிய கடிதம் (கி.பி.110-115)
தொகு"எனக்கு தெரிந்த நம்பிக்கைப்படி, அவர் உயிர்த்த பிறகும் உடலோடு இருந்தார்; மேலும் அவர் பேதுரு மற்றும் தோழர்களிடம் வந்தபோது, 'என்னைத் தொட்டுப் பாருங்கள், நான் உடலற்ற பூதமல்ல' என்றார். மேலும் அவர்கள் அவரை நேரடியாகத் தொட்டார்கள், நம்பினார்கள், அவரது உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொண்டார்கள். இருந்தாலும் மரணத்தை இகழ்ந்த காரணத்தால், அவர்கள் மரணத்துக்கு மேற்பட்டவர்களாக இல்லை. மேலும் அவரது உயிர்ப்புக்கு பின், அவர் அவர்களோடு உண்டு குடித்தார்."
அந்தியோக் ஆயர் இக்னேசியஸ் மக்னேசியருக்கு எழுதிய கடிதம் (கி.பி.110-115)
தொகு"நமது நம்பிக்கையான இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, போன்சியு பிலாத்துவின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த அவரது திருப்பாடுகள், உயிர்ப்பு ஆகியவை உண்மையானவை."
குவாட்ராட்டஸ் பேரரசன் ஹாட்ரியனுக்கு எழுதியது (கி.பி.125)
தொகு"எப்பொழுதும் உங்கள் முன் இருக்கும் நமது மீட்பரின் செயல்கள், உண்மையான அற்புதங்கள்; யாரெல்லாம் குணமடைந்தார்களோ, யாரெல்லாம் உயிரோடு எழுப்பப்பட்டார்களோ, யாரெல்லாம் பார்த்தார்களோ, அவர்கள் அப்பொழுது மட்டுமின்றி, எப்பொழுதும் இருந்தார்கள். அவர்கள் நம் ஆண்டவர் உலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி, அவர் உலகத்தை விட்டு சென்ற பிறகும் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் நாம் வாழும் இக்காலத்திலும் வாழ்ந்தார்கள்."
(புனைவு) பர்னபாஸ் எழுதியது (கி.பி.130-138)
தொகு"இயேசு உடலுருவில் தோன்றுவது தேவையாக இருந்தது. அவர் இஸ்ரயேலில் போதித்து, பல அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தார்; மேலும் அவர் அவர்களை அதிகமாக அன்பு செய்தார். தனது நற்செய்தியை போதிக்க தனக்கென்று திருத்தூதர்களை தேர்வு செய்தார். ஆனால் அவர் தன்னையே துன்பத்திற்கு உட்படுத்த மிகவும் விரும்பினார்; அதற்காக அவர் (சிலுவை) மரத்தில் துன்புறுவது அவசியமாக இருந்தது."
மறைசாட்சி ஜஸ்டின் பேரரசன் அன்ட்டோனினஸ்க்கு எழுதியது (கி.பி.130-138)
தொகு"இயேசுவுக்கு சிலுவையில் அறையப்பட்டபோது, அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அவரை மறுதலித்து, கைவிட்டனர்; அதன்பின், அவர் உயித்தெழுந்து அவர்களுக்கு காட்சி அளித்து, நிகழ்ந்தவற்றைப் பற்றி இறைவாக்குகள் முன்னறி வித்ததை அவர்களுக்கு கற்பித்து, அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த போதே விண்ணகம் ஏறிச் சென்றார். அதனால் நம்பிக்கை கொண்ட அவர்கள், அவர் அனுப்பிய வல்லமையைப் பெற்றுக்கொண்டு, எல்லா மக்கள் இனத்தாரிடமும் சென்று, இவற்றைக் கற்பித்தார்கள்; அவர்கள் திருத்தூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்."
மறைசாட்சி ஜஸ்டின் ட்ரைபோவுடனான உரையாடல் (கி.பி.150)
தொகு"இயேசுவை அவர்கள் சிலுவையில் அறைந்தபோது, அவரது கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள்; மேலும், அவரது ஆடைகள் மேல் சீட்டுப்போட்டுத் தங்களிடையே பகிர்ந்துகொண்டார்கள். ஆண்டவர் மாலைவேளை வரை (சிலுவை) மரத்தில் தொங்கினார்; சூரியன் மறையும் நேரத்தில் அவரை அடக்கம் செய்தார்கள்; பின்பு மூன்றாம் நாள் அவர் மீண்டும் உயித்தெழுந்தார்."
மற்ற பழங்கால பதிவுகளில்
தொகுயூத வரலாற்று ஆசிரியர் ப்ளாவியஸ் ஜோசப்பஸ் (கி.பி.37-97)
தொகு"இக்காலத்தில் இயேசு என்று அழைக்கப்பட்ட ஞானமுள்ள ஒரு மனிதர் இருந்தார். அவரது நடத்தை நல்லதாக இருந்தது; அவர் குற்றமற்றவராக இருந்தார். யூதர்களி லும், மற்ற நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் அவரது சீடர்களானார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு, பிலாத்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார். அவரைப் பின்பற்றியவர்கள் தங்கள் சீடத்துவத்தை விட்டுவிடவில்லை. இயேசு சிலுவையில் இறந்த மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் உயிருடன் வந்து தங்களுக்கு காட்சி அளித்ததாக அவர்கள் அறிவித்தார்கள்; அதன்படி, இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா அவராகத்தான் இருக்க வேண்டும்."
ஜூலியஸ் ஆப்ரிக்கானஸ் சுட்டிக்காட்டுவது (கி.பி.221)
தொகு"(கி.பி.52ல்) தாலஸ் எழுதிய (மத்திய கிழக்கின்) வரலாறுகளின் மூன்றாவது நூலில், (இயேசுவின் மரணத்தின்போது சூழ்ந்த) காரிருளை சூரிய கிரகணம் என்று குறிப்பிடுவது காரணமற்றதாகத் தெரிகிறது." [பாஸ்கா விழா கொண்டாடப்படும் முழுநிலவு நாளில் சூரிய கிரகணம் நிகழ்வது சாத்தியமற்றது.]
ரோமின் வரலாற்று ஆசிரியர் கொர்னேலியஸ் தாசித்துஸ் (கி.பி.55-120)
தொகு"கிறிஸ்து திபேரியசு ஆட்சிக் காலத்தில், நமது ஆளுநர்களில் ஒருவரான பிலாத்துவின் கரங்களில் துன்புற்று மரண தண்டனை அடைந்தார்."
யூத போதனை நூல் (கி.பி.70-200)
தொகு"பாஸ்கா விழாவுக்கு முன்தினம் மாலையில், இயேசு (சிலுவையில்) கொலையுண்டார். அதற்கு நாற்பது நாட்கள் முன்பாக, 'அவர் மாயவித்தைகள் (அற்புதங்கள்) வழியாக இஸ்ரயேலை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதால், கல்லால் எறிந்து கொல்லப்பட இருக்கிறார். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் முன்வந்து, அவருக்காக பரிந்து பேசலாம்' என்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக யாரும் வராததால் அவர் கொல்லப்பட்டார்."
கிரேக்க கேலிப்பேச்சாளர் லூசியன் (கி.பி.2ஆம் நூற்றாண்டு)
தொகு"சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒரு தனிப்பட்ட மனிதரை (இயேசுவை), கிறிஸ்தவர்கள் இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள்."
சிரியாவைச் சார்ந்த மாரா பார்-செரப்பியன் எழுதியது (கி.பி.70-200)
தொகு"யூதர்கள் தங்கள் ஞானமுள்ள அரசரை (இயேசுவை) கொன்றதால் என்ன இலாபம் அடைந்தார்கள்? அதன்பிறகு அவர்களின் அரசு அழிக்கப்பட்டது. இந்த ஞானமுள்ள அரசர் நன்மைக்காக இறந்தார்; அவரது போதனைகளின்படியே அவர் வாழ்ந்து காட்டினார்."
ஆதாரங்கள்
தொகு- ↑ Wayne Grudem, Systematic Theology (Leicester: Inter-Varsity Press, 1994); pages 90-91
- Adam, Karl (1933). Jesus Christus. Augsburg: Haas.
- Adam, Karl (1934). The Son of God (English ed.). London: Sheed and Ward.
- Brown, Raymond E. (1997) An Introduction to the New Testament. Doubleday பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-24767-2
- Daniel Boyarin (2004). Border Lines. The Partition of Judaeo-Christianity. University of Pennsylvania Press.
- Doherty, Earl (1999). The Jesus Puzzle. Did Christianity Begin with a Mythical Christ? : Challenging the Existence of an Historical Jesus. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9686014-0-5
- Drews, Arthur & Burns, C. Deslisle (1998). The Christ Myth (Westminster College-Oxford Classics in the Study of Religion). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57392-190-4
- Durant, Will (1944). Caesar and Christ, Simon & Schuster, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-11500-6
- Ehrman, Bart D. (1999). Jesus: Apocalyptic Prophet of the New Millennium. New York: Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195124731.
- Ehrman, Bart D. (2004). The New Testament: A Historical Introduction to the Early Christian Writings. New York: Oxford. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-515462-2.
- Ellegård, Alvar Jesus – One Hundred Years Before Christ: A Study In Creative Mythology, (London 1999).
- France, R.T. (2001). The Evidence for Jesus. Hodder & Stoughton.
- Freke, Timothy & Gandy, Peter. The Jesus Mysteries - was the original Jesus a pagan god? பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7225-3677-1
- Fuller, Reginald H. (1965). The Foundations of New Testament Christology. Scribners. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-15532-X.
- George, Augustin & Grelot, Pierre (Eds.) (1992). Introducción Crítica al Nuevo Testamento. Herder. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-254-1277-3
- Koester, Helmut (1992). Ancient Christian Gospels. Harrisburg, PA: Continuum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0334024501.
- Gowler, David B. (2007). What Are They Saying About the Historical Jesus?. Paulist Press.
- Grant, Michael, Jesus: An Historian's Review of the Gospels, Scribner, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-81867-1
- Habermas, Gary R. (1996). The Historical Jesus: Ancient Evidence for the Life of Christ பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89900-732-5
- Leidner, Harold (1999). The Fabrication of the Christ Myth. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9677901-0-7
- Meier, John P., A Marginal Jew: Rethinking the Historical Jesus, Anchor Bible Reference Library, Doubleday
- (1991), v. 1, The Roots of the Problem and the Person, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-26425-9
- (1994), v. 2, Mentor, Message, and Miracles, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-46992-6
- (2001), v. 3, Companions and Competitors, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-46993-4
- (2009), v. 4, Law and Love, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300140965
- Mendenhall, George E. (2001). Ancient Israel's Faith and History: An Introduction to the Bible in Context. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-664-22313-3
- Messori, Vittorio (1977). Jesus hypotheses. St Paul Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85439-154-1
- Miller, Robert J. Editor (1994) The Complete Gospels. Polebridge Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-065587-9
- Murphy, Catherine M. PhD. 2007. "The Historical Jesus for Dummies". பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470167858
- New Oxford Annotated Bible with the Apocrypha, New Revised Standard Version. (1991) New York, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-528356-2
- Price, Robert M. (2000). Deconstructing Jesus. Amherst, N.Y.: Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57392-758-9.
- Price, Robert M. (2003). The Incredible Shrinking Son of Man: How Reliable is the Gospel Tradition?. Amherst, N.Y.: Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59102-121-9.
- Tacitus (2006), The Annals of Ancient Rome. Translated by Michael Grant and first published in this form in 1956. The Folio Society, 2006.
- Wells, George A. (1988). The Historical Evidence for Jesus. Prometheus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87975-429-X
- Wells, George A. (1998). The Jesus Myth. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8126-9392-2
- Wells, George A. (2004). Can We Trust the New Testament?: Thoughts on the Reliability of Early Christian Testimony. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8126-9567-4
- Wilson, Ian (2000). Jesus: The Evidence (1st ed.). Regnery Publishing.
வெளி இணைப்புகள்
தொகு- From Jesus to Christ, a PBS site.
- The New Testament Documents: Are They Reliable? பரணிடப்பட்டது 2011-10-04 at the வந்தவழி இயந்திரம், by F.F. Bruce.
- The Quest of the Historical Jesus: A Critical Study of its Progress from Reimarus to Wrede, by Albert Schweitzer
- Jesus - History or Myth? (debate between historical scholars)
- Surpassing wonder: the invention of the Bible and the Talmuds By Donald Harman Akenson