இயோசிநாடி

இயோசிநாடிகள் அல்லது இயோசினேற்பிகள் அல்லது இயோசினாஃபில்கள் (Eosinophils) என்று இவை அழைக்கப்படுகின்றது. 0.5-3.0% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை . இவை நகரும் இயல்புடையவை. உடல் உறுப்புகளின் திசுக்களில் வீக்கம் ஏற்படின் இவை அங்கு நகர்ந்து செல்கின்றன. ஒவ்வாமைத் தன்மையில் (Allergy) இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவை நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் முக்கிய பங்களிக்கும். பலகல ஒட்டுண்ணிகள் தாக்கம், வேறு சில தொற்றுநோய்கள் உள்ள நிலையில் இவற்றின் தொழிற்பாடு அதிகரிக்கும்.

நுணுக்குக்காட்டியின் கீழ், 400x உருப்பெருக்கத்தில் குருதிப் பூச்சு ஒன்றில் தெரியும் இயோசினேற்பியின் தோற்றம். இயோசினேற்பியைச் சுற்றி செங்குருதியணுக்கள் காணப்படுகின்றன. இடது மேல் மூலையில் குருதிச் சிறுதட்டு காணப்படுகின்றது

வெளி இணைப்பு:தொகு

http://en.wikipedia.org/wiki/Eosinophil_granulocyte

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோசிநாடி&oldid=1474944" இருந்து மீள்விக்கப்பட்டது