முதன்மை பட்டியைத் திறக்கவும்
Low Temperature Scanning Electron Microscope (LTSEM) image of the mite, Varroa destructor, on a honey bee host

ஒட்டுண்ணி வாழ்வு (Parasitism) என்பது, வேறுபட்ட உயிரினங்கள் தொடர்பான ஒருவகைக் கூட்டு வாழ்வு எனலாம். இதில், ஒரு உயிரினம், மற்ற உயிரினத்துடன் நீண்டகால, நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு பயன் பெறுகின்றது. இங்கே முதல் உயிரினம் ஒட்டுண்ணி எனவும் மற்றது ஓம்புயிர் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தொடர்பின் மூலம் ஓம்புயிருக்குப் பாதிப்பு உண்டாகின்றது. பொதுவாக ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களிலும் மிகவும் சிறியவை. ஒட்டுண்ணிகள் தமது வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு சிறப்பாக்கம் பெற்றிருப்பதுடன்; ஓம்புயிர்களிலும் விரைவாகவும், பெருமளவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. நாடாப்புழுக்கள், பிளாஸ்மோடியம் இனங்கள், பேன்கள் முதலிய பலவகை உயிரினங்கள், முதுகெலும்பிகளான ஓம்புயிர்களுடன் கொண்டுள்ள தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள் ஆகும்.

ஒட்டுண்ணி வாழ்வினால், இதில் தொடர்புடைய உயிரினங்களின் உடல் நலம் தொடர்பில் பயன் அல்லது பாதிப்பு விளைகிறது. ஒட்டுண்ணிகள், ஓம்புயிர்களில் பலவகையில் உடல் நலக் குறைவை ஏற்படுத்துகின்றன. இது, பலவகையான நோய்க்குறியியல் பாதிப்புக்கள், துணைநிலைப் பாலியல் இயல்புக் குறைபாடுகள் முதல் ஓம்புயிர்களின் நடத்தை மாற்றங்கள் வரையிலான பாதிப்புக்களாக அமையக்கூடும். ஒட்டுண்ணிகளோ ஓம்புயிர்களிலிருந்து உணவு, வாழிடம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு பரவுவதன் மூலம் தங்கள் உடல்நலத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுண்ணி_வாழ்வு&oldid=2118747" இருந்து மீள்விக்கப்பட்டது