இரசீத்து இரகுமான்

பாக்கித்தானிய ஊடகவியலாளர்

இரசீத்து இரகுமான் (Rashed Rahman) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான டெய்லி டைம்சின் முன்னாள் ஆசிரியராக இருந்தார் . 2009 ஆம் ஆண்டு முதல்– நவம்பர் 2015 வரை இங்கு இவர் ஆசிரியராகப் பணியாற்றினார் [1] [2] [3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

இரசீத்து இரகுமான் இங்கிலாந்து மற்றும் வேல்சு நாடுகளில் படித்து பட்டயக் கணக்காளராகத் தகுதி பெற்றார். பின்னர் பத்திரிகையைத் தொழிலாக எடுக்க முடிவு செய்தார். முன்னதாகப் பாக்கித்தானில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ்களின் நிர்வாக ஆசிரியராக இருந்துள்ளார் - தி போசுட்டு, தி நேசன் (பாக்கித்தான்) மற்றும் டெய்லி டைம்சு (பாக்கித்தான் ) ஆகியன இவர் பணிபுரிந்த சில பத்திரிகைகளாகும். [2] இரசீத்து இரகுமான் ஓர் அனுபவமிக்க பத்திரிகையாளர் மற்றும் ஒரு மூத்த இடதுசாரி அரசியல் பிரச்சாரகர் ஆவார். டெய்லி டைம்சு நாளிதழின் ஆசிரியராக, இவர் தனது நிருபர்களையும் கட்டுரையாளர்களையும் வெளிப்புற குறுக்கீட்டிலிருந்து பாதுகாத்து வந்தார். [4]

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் , டான் குழுமச் செய்தித்தாள்களில் கட்டுரையாளராக இரசீத்து இரகுமான் எழுதத் தொடங்கினார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Editor quits, columnists dropped: Pakistan Army 'has choked all dissent' The Indian Express (newspaper), Published 29 November 2015, Retrieved 6 December 2017
  2. 2.0 2.1 Journalists stress protection of media from internal, external threats Daily Times (newspaper), Published 31 July 2016, Retrieved 6 December 2017
  3. "Pakistan: Friend Or Foe In Fight Against Terrorism?". National Public Radio. 4 May 2011. பார்க்கப்பட்ட நாள் 6 December 2017.
  4. They shut down my column The Indian Express, Published 1 December 2015, Retrieved 6 December 2017
  5. Being a journalist 'behind enemy lines' Herald (newspaper)- Dawn Group of Newspapers, Published 24 November 2017, Retrieved 6 December 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசீத்து_இரகுமான்&oldid=3749007" இலிருந்து மீள்விக்கப்பட்டது