இரஞ்சீதா கோலி

இந்திய அரசியல்வாதி

இரஞ்சீதா கோலி (Ranjeeta Koli; பிறப்பு 9 மே 1979) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இராசத்தானின் பரத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 707992 வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றி பெற்றார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 61.74% வாக்குகள் ஆகும். இவர் அரசியலுக்கு புதியவர். ஆனால் இவர் ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மாமனார் கங்காராம் கோலி 1991 முதல் 1998 வரை பயானா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்தார்.[2][3][4]

இரஞ்சீதா கோலி
श्रीमती रंजीता होमचंदजी कोली
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
23 மே 2019 – 4 June 2024
முன்னையவர்பகதூர் சிங் கோலி
பின்னவர்சஞ்சனா ஜாட்டே
தொகுதிபரத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
रंजीता

25 செப்டம்பர் 1979 (1979-09-25) (அகவை 45)
செய்ப்பூர், இராசத்தான்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கோம்சந்தி கங்காராம்ஜி கோலி
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள்
பெற்றோர்
  • சகுந்தலா தேவி மாகவுர் (தாய்)
கல்விஇராஜ்கிய பாலிக வித்யாலயா, கலிங்கு, பரத்பூர்
வேலைவிவசாயி, அரசியல்வாதி
அறியப்படுவதுஏழை குழந்தைகளுக்கு கல்வி, சமூக சேவை
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bharatpur Lok Sabha Election Result 2019: BJP's Ranjeeta Koli victorious against Congress' Abhijeet Jatav". Daily News and Analysis. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Bharatpur: A battle of Dalits in the Jat belt of Rajasthan". 1 May 2019. https://economictimes.indiatimes.com/news/elections/lok-sabha/india/a-battle-of-dalits-in-the-jat-belt-of-rajasthan/articleshow/69123605.cms. 
  3. "पहले तीन बार ससुर, अब बहू बनी सांसद". Patrika. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  4. "जानलेवा हमले की निंदा: सांसद रंजीता कोली पर किए जानलेवा हमला की कोली समाज ने निंदा की". Dainik Bhaskar (in இந்தி). 2021-11-14. பார்க்கப்பட்ட நாள் 2022-02-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஞ்சீதா_கோலி&oldid=4116026" இலிருந்து மீள்விக்கப்பட்டது