இரட்டை வழக்கு

(இரட்டைவழக்கு (மொழியியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொழியியலில், இரட்டை வழக்கு (diglossia) என்பது, குறித்த ஒரு மொழிச் சமுதாயத்தில், ஒரே சமயத்தில் இரண்டு வகையான மொழி வழக்குகள் பயன்பாட்டில் இருப்பதைக் குறிக்கிறது. இதில், அச்சமுதாயத்தினர் தம்மிடையேயான தொடர்புகளுக்கு அன்றாடம் வழமையாகப் பயன்படுத்தும் மொழி வழக்குக்குப் புறம்பாக, உயர் நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட இன்னொரு வழக்கும் இருக்கும். இரண்டாவது வகை, இலக்கியம், முறைசார் கல்வி, மேடைப்பேச்சு போன்றவற்றில் பயன்படுகிறது.[1] அன்றாட வழக்கு "தாழ்ந்த (L)" வகை எனவும், மற்றது "உயர் (H)" வகை எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. பெரும்பாலும் இது பேச்சு மொழிக்கும், எழுத்து அல்லது ஊடக மொழிக்குமான வேறுபட்ட வழக்குகளைக் குறிக்கிறது. உலகின் பல மொழிகளில் இவ்வாறான இரட்டைவழக்கு காணப்படுகின்றது. கிரேக்கம், அரபி, இந்தோனேசியம், தமிழ்,[2] தெலுங்கு என்பன இதற்கு எடுத்துக்காட்டுகள். இரட்டை வழக்கு என்பது வட்டார வழக்குகளைச் சுட்டவில்லை.

எடுத்துக்காட்டுக்கள்

தொகு
  • பேச்சு வழக்கு: எங்க போயிட்டு வாறா
  • எழுத்து வழக்கு: எங்கு போய் வருகிறீர்கள்
  • பேச்சு வழக்கு: சாப்பாடு நல்லாயிருக்கா
  • எழுத்து வழக்கு: உணவு நன்றாக உள்ளதா

குறிப்புகள்

தொகு
  1. Charles A. Ferguson (1959). "Diglossia". Word 15: 325–340. https://archive.org/details/sim_word_1959-08_15_2/page/325. 
  2. "Tamil language". Archived from the original on 2010-06-12. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_வழக்கு&oldid=4147880" இலிருந்து மீள்விக்கப்பட்டது